Monday, 27 April 2015

”மைக்கால் அடித்து மண்டையை திறந்துவிடுவேன்” மிரட்டிய விஜயகாந்த்!!


ஞாயிற்றுக் கிழமை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஊடகங்களை ஒரு கலக்கு கலக்கினார். எதிர்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து, ஆந்திர துப்பாக்கிச் சூடு, மேகதாது அணை, நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட பல விஷயங்களை பேசப் போவதாக தெரிவித்தார் விஜயகாந்த்.
இதே போல், இன்று அனைத்துக் கட்சி பிரமுகர்கள் விஜயகாந்த் தலைமையில், டெல்லி சென்றனர். மோடியைச் சந்தித்து அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதை அடுத்து, செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேட்டியளைத்தார்.
இந்த பேட்டியில், ஆலோசனை, பயனுள்ளதாக அமைந்ததாகவும், பிரதமர் நல்லது செய்வதாக உறுதி அளித்ததாகவும், தமிழக முதல்வரை சந்திப்பதை விட மோடியைச் சந்திப்பது எளிதாக இருந்ததாகவும் விஜயகாந்த் கூறியிருந்தார். மேலும், அரசியல் கூட்டணி குறித்து யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம் என்று தெரிவித்தார் கேப்டன்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், தமிழக அரசியல் குறித்து கேள்வி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த்,
”ஏ நீ யார்….?”
“எந்த டி.வி…?”
”நீ இப்படித்தான் கேட்பாயா...?"
”மைக்கை தூக்கி அடித்து மண்டையை திறந்து விடுவேன்” என்று கையை ஓங்கினார்.
உடனே, அங்கிருந்த மற்ற தலைவர்கள் விஜயகாந்தை சமாதானம் செய்து அமர வைத்தனர். இதன் பின்னர் பேட்டியளிக்க மறுத்து சென்றுவிட்டார். இதைக் கண்டு நிருபர்க் குழு அதிர்ச்சியில் உறைந்து போனது. அருகில் இருந்த தி.மு.க.,வை சேர்ந்த திருச்சி சிவா விஜயகாந்தை அவ்வப்போது கையை பிடித்து அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment