ஹாலிவுட்டின் முன்னிலை நடிகர்களில் ஒருவரான ஹிரித்திக் ரோஷன் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். 41 வயதான ஹிரித்திக் ரோஷன் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இது தொர்பாக ஹிரித்திக்கிடம் கேட்டபோது "ஆம், இவ்வருடம் நான் ஹாலிவுட் படமொன்றில் நடிக்கவுள்ளேன்" என அவர் பதிலளித்துள்ளார்.
அப்படம் மற்றும் தனது பாத்திரம் குறித்த வேறு தகவல்களை அவர் வெளியிடவில்லை. எனினும், கிரிஷ், பேங் பேங் போன்ற அக் ஷன் படங்களில் நடித்த ஹிரித்திக் ரோஷன், ஹாலிவுட் படத்திலும் அக் ஷன் வேடமொன்றில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேங் பேங் படமானது ஹாலிவுட்டின் முன்னிலை நடிகர் டாம் குரூஸ் நடித்த நைட் அன்ட் டே படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் பங்குபற்றும் வீரர்கள் நால்வருக்காக 20 லட்சம் இந்திய ரூபாவுக்கு அதிகமான தொகையை சேகரிப்பதற்கு ஹிரித்திக் ரோஷன் திட்டமிட்டுள்ளார். அடுத்த வருடம் பிரேஸிலில் நடைபெறவுள்ள பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இவ்வீரர்கள் பங்குபற்றுவதற்கு மேற்படி நிதியுதவி வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டியொன்றில் பாராலிம்பிக்ஸ் போட்டியாளர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து வெளியான செய்திகளை வாசித்தபோது நான் மிகவும் கவலையடைந்தேன். ஆனால் மாற்றமொன்றை மேற்கொள்வதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளதால் அவர்களுக்கு உதவுவதற்கு எனது குழுவினருடன் இணைந்து நிதி சேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித் தேன்" என ஹிரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment