Thursday, 30 April 2015

தயாராகிறது என்னை அறிந்தால்-2.. அஜித் நடிக்கவில்லையா..?


என்னை அறிந்தால் படம் ரிலீஸாவதற்கு முன்பு இப்படம் வெற்றிபெற்றால் என்னை அறிந்தால் பாகம் 2 எடுக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருந்தார் இயக்குநர் கெளதம் மேனன். அப்போது அவர் சொன்னதை போலவே படமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது. இதனால் என்னை அறிந்தால் பாகம் 2-வை எடுக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தப் படத்தை இரண்டு மொழிகளில் அதாவது இந்தி, தமிழில் எடுக்கவுள்ளாராம் கெளதம் மேனன். தமிழில் அஜித்தே நடிக்கிறாராம். இந்தியில் அங்குள்ள பிரபலமான நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து இயக்கும் எண்ணம் இருக்கிறதாம். ஒருவேலை இந்தியில் அஜித் நடிக்க விரும்பினால் தலையை வைத்து இயக்குவேன் என்கிறார் கௌதம்மேனன்.
இந்த பிராஜெக்ட் பெரியது என்பதால் ஆர அமர யோசித்து எடுக்கப்போவதாகவும் அவர் கூறுகிறார். ஆனால் இது குறித்து தல தரப்பு என்ன சொல்கிறது என்று விசாரித்தால், பொதுவாக அஜித் ஒரு படத்தின் தொடர்ச்சியான கதைகளில் நடிப்பதை விரும்புவதில்லை என்றும் ஆனால் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வித்தியாசமாக இருந்தால் யோசிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். இன்னொரு தரப்பு அஜித் தமிழில் நடித்தாலும் இந்தியில் நடிக்க மாட்டார் என்று அடித்து கூறுகிறது.

No comments:

Post a Comment