Monday, 27 April 2015

காமெடி நடிகர் சதீஷுடன் ப்ரியா ஆனந்த் நெருக்கம்..!


பொதுவாக ஹீரோயின்கள் அனைவரும் ஹீரோக்களிடமே அதிகமாக நெருக்கம் காட்டுவார்கள், காமெடி நடிகர்கள், துணை நடிகர்களை ஏறெடுத்துகூட பார்க்க மாட்டார்கள். இது பல காமெடி நடிகர்களுக்கு எரிச்சலை கிளப்பியிருக்கிறது. சமீபத்தில் கூட விவேக் ஒரு விழாவில் பேசுகையில் நகைச்சுவையுள்ள ஒருவர் தான் தனக்கு கணவனாக வரவேண்டும் என்று மேடைக்கு மேடை நடிகைகள் சொல்வார்கள். ஆனால் நகைச்சுவை செய்யும் எங்களை அவர்கள் ஏறெடுத்துகூட பார்ப்பதில்லை என்று கூறினார்.
ஆனால் நடிகை ப்ரியா ஆனந்த் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறார். அவர் காமெடி நடிகர் சதீஷுடன் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை ப்ரியாஆனந்த்துக்கு சமீபகாலமாக காமெடி காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது. இதனால் தற்போது காமெடி ஹீரோக்களுடன் நட்பு வளர்ப்பதில் தீவிரமாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், எதிர்நீச்சல் படத்தில் நடித்தபோது அந்த படத்தில் காமெடியனாக நடித்த சதீஷுடன் நட்பு வளர்க்கத் தொடங்கிய ப்ரியாஆனந்த், அதையடுத்து அவர் நடித்த படங்களில் தான் இடம்பெறாதபோதும் அவருடன் நெருக்கமாகவே பேசி வந்திருக்கிறார். தற்போது வை ராஜா வை படத்தில் அவருடன் நடித்திருக்கிறார்.
அதோடு, காமெடி காட்சிகளில் தான் நடித்தபோது சதீஷிடம் பயிற்சி பெற்றாராம் ப்ரியாஆனந்த். காமெடி டயலாக்குகளை எப்படி எப்படி பேசி நடிக்க வேண்டும் என்று அவருக்கு டிப்ஸ் கொடுத்தாராம் சதீஷ். அது தனக்கு பெரிய உதவியாக இருந்தது என்று கூறும் ப்ரியாஆனந்த், தற்போதைய நடிகர்களில் சதீஷ்தான் தனது ஆத்மார்த்தமான நண்பர் என்றும் வெளிப்படையாக கூறுகிறார். இது எங்க போய் முடிய போகிறதோ..?

No comments:

Post a Comment