உலகின் பிரபல தொழிற்நுட்ப நிறுவனமான ஆப்பிள் 2015-ன் முதல் காலாண்டில் 60 மில்லியன் ஐஃபோன்களை விற்று சாதனை படைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு சீனாவில் கிடைத்த பெரும் வரவேற்பின் காரணமாக அந்த நிறுவனம் 61மில்லியன் ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்துள்ளது. இதன் மொத்த வருவாயனது, 58பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதன் மொத்த லாபம் 13.6பில்லியன் டாலர்கள்.
மேலும் இந்நிறுவனம், 4 மில்லியன் மேக் மேஜை மற்றும் லேப்டாப் கணினிகளை விற்றுள்ளதாம்.
இது குறித்து அந்நிறுவன தலைமை நிர்வாகி டிம் குக் கூறுகையில், ’ஐபோன், மேக் மற்றும் ஆப்பிள் ஸ்டோரின் தொடர்ச்சியான வெற்றி எங்களுக்கு இதற்கு முன்னெப்போதும் இல்லாத காலண்டு ரிசல்ட்டை தந்துள்ளது.
மேலும், அடுத்த காலண்டின் ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது மிகவும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆப்பிள் வாட்ச் வெளியாகியுள்ள இவேளையில் ஜூனில் இதைவிட அதிக ரிசல்ட் கிடைக்கும் என்று நம்புகின்றோம்.’ என்று கூறினார்.
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் வாட்ச் இது. இது கடந்த வாரம் வெளியானது. இதன் விற்பனை நிலவரங்கள் இந்த காலாண்டில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சில ஆய்வாளர்கள் ஏற்கனவே 2 மில்லியன் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனையாகியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இவற்றையும் கணக்கில் கொண்டால் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் 74 பில்லியன்கள் ஆகும். இதன் லாபம் மட்டும் 18 பில்லியன். இவ்வளவு அதிகமான வருமானத்தை முதல் காலாண்டில் எந்த ஒரு நிறுவனமும் ஈட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment