Saturday, 25 April 2015

சாந்தனுக்கும் மானாட மயிலாட கீர்த்திக்கும் திருமணம்..!


திரைப்பட இயக்குநர் பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு, சின்னத்திரை தொகுப்பாளர் கீர்த்தியை மணக்கிறார். இவர் களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி நடக்கிறது.
‘சக்கரக்கட்டி’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சாந்தனு. அதற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் எந்தப்படமும் பெரிதாக பேசப்படவில்லை. நடிகர் சாந்தனு சின்னத்திரை தொகுப்பாளர் கீர்த்தியை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. அப்போது இத்தகவலை இருவரும் மறுத்தனர்.
இந்நிலையில் தற் போது இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நிச்சயமாகியுள்ளது. கீர்த்தி தற்போது மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: “எங்கள் மகன் சாந்தனு என்கிற சோனுவுக்கு, கீர்த்தியுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி கோயிலில் திருமணமும், 22-ஆம் தேதி மாலை சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
திருமணம் குறித்து கீர்த்தி கூறுகையில், “நானும், சாந்தனுவும் 6 வயதிலிருந்தே நண்பர்கள். வீட்டில் திருமண பேச்சு எழுந்ததும், இருவரின் பெற்றோர்களும் பேசி எங்கள் திருமணத்தை முடிவு செய்தனர். சாந்தனு புதிய படத்தின் படப் பிடிப்புக்காக ஒரு மாதம் வெளிநாடு செல்ல இருக்கிறார். அந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment