Saturday, 25 April 2015

பிரிட்டன் தேர்தல்: இந்தியர்களின் ஆதரவைக் கோரும் பிரிட்டன் தலைவர்கள்!!


பிரிட்டனில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. எனவே, தேர்தல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியர்களின் ஆதரவையும் இங்கிலாந்து தலைவர்கள் கோரியுள்ளனர்.
இங்கிலாந்தில் மொத்தம், 14 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் தோராயமாக 615,000 இந்தியர்கள் வாக்குரிமை உள்ளவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வாழும், வெள்ளையர் அல்லாத பெரிய சமூகம் இந்திய சமூகம் தான்.
இங்கிலாந்தில் முதல் மூன்று வசதியான குடும்பங்கள் பட்டியலில் லக்ஷ்மி மிட்டல், இந்துஜா பிரதர்ஸ் போன்ற இந்திய வம்சாவழியினர் இடம்பெறுகின்றனர். எனவே நடக்க இருக்கும் பிரிட்டன் பொதுத் தேர்தலில் இவர்களின் ஆதரவு பெரும் பங்கு வகிக்கிறது.
எனவே, தேர்தலில் பெரும் செல்வாக்கு பெற்ற தற்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சியும், எதிர்கட்சியான தொழிலாளர்கட்சியும் பிரிட்டன் வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்கான பல முயற்சிகளை எடுத்துள்ளனர்.
எட் மில்லிபண்டின் தொழிலாள்ர் கட்சியின் சார்பில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கீத் வாஜ் என்பவர் லீசெஸ்டர் பகுதியில் வேட்பாளராக நிற்கவைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள இந்தியர்களைக் கவரும் வண்ணம், பாலிவுட்டின் அபிஷேக் பச்சனை வரவழைத்து பிரச்சாரம் செய்தார் கீத் வாஜ்.
இங்கிலாந்தில் ஆட்சியைப் பிடித்துள்ள டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ்ஸ் கட்சியின் சார்பிலும் இந்தியர் அமந்தீப் சிங் போகால் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 31 வாயதான போகால், இங்கிலாந்தின் அப்பர் பான் (Upper Bann) பகுதியில் நிற்கிறார். இந்தியாவில் பிறந்த அமந்தீப் சிங் போகால், 8 வயதில் இருந்து இங்கிலாந்தின் கெண்ட் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது அரசியல் முன்னுதாரணம் இந்திய பிரதமர் மோடி என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிடமிருந்து ஐக்கிய நாடுகள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் போகால்.
இது மட்டுமல்லாது, கருத்து கணிப்புகளின் படி இப்போதைக்கு டாப்பில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும் தற்போதைய முதல்வருமான டேவிட் கேமரூன், தன் மனைவி சமந்தா கேமரூனுடன் இங்கிலாந்தில் உள்ள சீக்கிய கோவிலுக்குச் சென்று மக்களின் ஆதரவைக் கோரினர். லேபர்ஸ் கட்சியின் எட் மெல்லிபண்டும் அண்மை வாரங்களில் சீக்கிய கோவிலுக்குச் சென்று இந்தியர்களது ஆதரவைக் கோரியுள்ளார்.
அண்மையில், செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இங்கிலாந்தில் இந்திய பிரிட்டிஷ் தலைவர்கள் பலர் உருவாக வேண்டும் என்று தாம் கருதுவதாகவும், ஒரு நாள் இவர்களில் ஒருவர் பிரதமராக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தியர்களின் ஓட்டு யாருக்கு:
ஆரம்ப காலங்களில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள், மற்ற கட்சிகளை விட தொழிலாளர் கட்சிக்கே அதிக ஆதரவளித்துள்ளனர். 1997ம் ஆண்டு 77% இந்தியர்கள் தொழிலாளர்கட்சிக்கு ஆதரவளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
காந்த 2010ம் ஆண்டு இந்த எண்னிக்கை குறைந்து, 61% இந்தியர்கள் தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஆனால், 2014ம் ஆண்டிற்கு பின் இந்நிலை அப்படியே தலை கீழாக மாறியுள்ளது.
2014ம் ஆண்டு தொழிலாளர் கட்சிக்கு ஆதரவளித்தவர்களின் எண்ணிக்கை 18% தன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைக்கு பெரும்பாலான பிரிட்டன் வாழ் இந்தியர்களின் தேர்தல் விருப்ப நாயகனாக இருப்பவர் டேவிட் கேமரூன் தான்.
சில மாதங்களுக்கு முன் இந்திய தேசியத் தந்தை காந்தியின் சிலையை, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அமைத்தது, தீபாவளி, அருவடைத் திருநாள் என்று பண்டிகைகளின் போது இந்து சமூகத்தினருடன் கலந்து கொண்டு கொண்டாடவது உள்ளிட்ட நடவடிக்கைகளால், இங்கிலாந்து வாழ் இந்தியர்களின் மனதில் இடம் பெற்று விட்டார் கேமரூன்.

No comments:

Post a Comment