Saturday, 25 April 2015

ஏலியன்ஸ் மக்களிடமிருந்து மறைக்கப்படுகிறது!!!


ஏலியன்ஸ் என்று அழைக்கப்படும் வேற்றுகிரக வாசிகள் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வதாகவும், ஆனால் அதனை உலக தலைவர்கள் மக்களிடம் இருந்து மறைக்கின்றனர் என்று கனடாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Paul D Hellyer 1963 முதல் 1967 வரை கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தவர். டொராண்டோ கல்கேரி பல்கலைகழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது Paul தெரிவித்ததாவது,
”செய்தி நிறுவனங்கள் வேற்றுக் கிரகவாசிகள் குறித்த ஆவணங்களைக் கண்டுகொள்வதே இல்லை. ஏனென்றால் அவை அனைத்தும் அசாதாரணமாக இருப்பதால் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டிவிடுகின்றனர்.
ஆனால் இவை அனைத்தும் ஒரு நாள் வெளிவரும். பூமிக்கும் வேற்றுக் கிரகவாசிகள் வந்து செல்வதை அறிந்தும் அது குறித்த விவரங்களை அளிக்காமல் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அதனை மறைக்கின்றனர். உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். மக்கள் அனைவரும் உண்மையைக் கூறுங்கள் என்று உலகத் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்புவார்கள்.
வெவ்வேறு தருணங்களில் குறைந்தது 4 வகையான வேற்றுக் கிரகவாசிகள் மற்றும் அடையாளம் காணமுடியாத பறக்கும் தட்டு பூமிக்கு வந்து இருக்கலாம். இதற்கான சான்றுகள் இருக்கின்றன. இது குறித்த தகவல்களை உலகத் தலைவர்கள் ஒப்புக்கொள்ள முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment