ஏப்ரல் 27
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!!!
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster), அல்லது நாடாளுமன்ற அவைகள் (Houses of Parliament) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்- மக்களவை, குறுமன்னர்கள் அவை- அமர்கின்ற இடமாகும்.
தேம்ஸ் ஆற்றின் வடகரையில் வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் லண்டன் பரோவின் மையப் பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் அண்மையில் உள்ளது. அரசாங்கக் கட்டிடங்களான வைட் ஹால் மற்றும் டௌனிங் சாலை இதற்கு அண்மையிலேயே உள்ளன. இந்தப் பெயர் இரு கட்டிடங்களுக்கு பொதுவானதாக உள்ளது.
1834-ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்த அரண்மனை அரண்மனை ஏப்ரல் 26 1840-ல் மீண்டும் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு 1870ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ல் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அரண்மனை அரசாங்கச் சடங்குகளுக்கு அரசியின் வசிப்பிடமாக தனது தகுதியையும் கம்பீரத்தையும் தக்க வைத்துள்ளது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1959 - மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.
1978 - இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியது.
1981 - Xerox PARC நிறுவனம் முதன் முறையாக கணனி Mouse ஐ அறிமுகப்படுத்தியது.
1994 – தென்னாப்ரிக்காவில் கருப்பினத்தவர்கள் முதன்முதலாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
இன்றைய சிறப்பு நாள்:
1960 – டோகோ விடுதலை அடைந்தது.
1961 - சியோரா லியோனி விடுதலை அடைந்தது.
No comments:
Post a Comment