Sunday, 26 April 2015

ஐ.பி.எல் 8: டெல்லி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய கெய்ல்..!


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய 26வது ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 10விக்கட்டுக்களால் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டி நேற்ற டெல்லி பெரோஷா கோட்லா என்ற மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதினர். நேற்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி டெல்லி அணியின் ஆரம்பத் ஆட்டக்காரரான களமிறங்கிய ஸ்ரீரியாஸ் ஐயரும் மயான்க் அகர்வாலும் ஆடினர். இதில் ஸ்ரீரியாஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அந்த அணியின் இன்னுமொரு ஆரம்பத் ஆட்டக்காரரான மயான்க் அகர்வால் (27) ரன்களையும், அணித்தலைவர் டூமினி (13) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நேற்றைய ஆட்டத்தில் தனது அதிரடியை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் (2) ரன்களில் மிக வேகமாக ஆட்டமிழந்தார். டெல்லி அணிக்கு அதிக கூடிய ரன்னாக கேதர் யாதவ் (33) ரன்களை அடித்தார். ஏனைய வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 18.2 ஒவர்களில் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 95 ரன்களை மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியின் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3விக்கட்டுக்களையும், வருண் ஆரோன், டேவிட் வீஸ் ஆகியோர் தலா 2விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து பெங்களூர் அணி 96 என்ற ரன் இலக்குடன் ஆடிய அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான கெய்ல் டெல்லி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அவர் 6பவுண்டரி, 4சிக்ஸருடன் அரைச்சதம் தாண்டி (62) ரன்களையும், அணித்தலைவர் (35) ரன்களையும் எடுத்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சில் ஒருவர் கூட விக்கட்டுக்களை கைப்பற்ற முடியவில்லை. அந்த அணிக்கு நேற்றைய போட்டி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
இதேவேளை பெங்களூர் அணி மிக விரைவாகவே ரன்களை எடுத்த அந்த அணி 10.3 ஒவர்களில் விக்கட் இழப்பின்றி 99 ரன்களை அடித்து 10 விக்கட்டுக்களால் அபார வெற்றியை பெற்றது பெங்களூர் அணியின் பந்துவீச்சாளரான வருண் ஆரோன் தனது பந்தில் தொடர்ச்சியாக இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றிய அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment