Sunday, 26 April 2015

தின பலன் 27-04-2015


தெரிந்து கொள்வோம்: தசாவதாரமும், டார்வினின் பரினாமக் கொள்கையும்
நம் முன்னோர்கள் இன்றைய அறிவியலின் முன்னோடிகள் கண்டு பிடித்த தத்துவங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்துவிட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதற்கான சான்றுகளுள் ஒன்று தான் இந்துக் கடவுளான மகா விஷ்னுவின் 10 அவதாரங்கள். இந்த புராணக் கதை டார்வினின் பரினாமக் கொள்கையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிரதிபலித்திருக்கிறது. விஷ்னுவின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையும், மற்ற ஐந்து அவதாரங்கள், மனிதனின் வாழ்கை முறை வளர்ச்சியையும் கூறுவதாக அமைந்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். இதில், ஒரு மீனில் விஷ்னு தோற்றமளிக்கிறார். டார்வினின் கொள்கைப் படி இவ்வுலகில் ஒரு செல் உயிரிகளில் இருந்து விலங்காக உருவெடுத்த முதல் உயிரி மீன் அல்லது நீர் வாழ் உயிரினம்.
கூர்மாவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். டார்வினின் கொள்கையின் படி, மீனைத் தொடர்ந்து நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய பல்லி இனத்தைச் சேர்ந்தவை பரிணமித்தன. அதைப் பிரதிபலிக்கிறது இந்த ஆமை அவதாரம்.
வராக அவதாரம்: பூமியிலும் நிலத்திலும், வாழ்ந்த உயிரினங்களைத் தொடந்து நிலத்தில் மட்டும் வாழக்கூடியவையாகத் தோன்றியவை பாலூட்டிகள். பாலூட்டிகளை குறிக்கும் விதமாக அமைகிறது வராக அவதாரம் எனும் பன்றி முக அவதாரம்.
நரசிம்ம அவதாரம்: பிரகலாதனுக்காக தூணில் திருமால் மனிதனும் மிருகமும் அல்லாத வடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். இது குரங்கிலிருந்து தோன்றிய மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத ஆதி மனிதனின் தோற்றத்தை குறிப்பதாக அமைகிறது.
வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். முழுதாக பரிணமித்த ஒரு மனிதனை பிரதிபலிக்கிறது இந்த அவதாரம். இதனைத் தொடர்ந்து வரும் ஐந்து அவதாரங்களும், மனிதனின் நாகரீக வளர்சியை பிரதிபலிக்கின்றன.
ஆதிகால மனிதன் முதலில் கத்தி கோடறி, வில், அம்பு முதலியவற்றை பயன்படுத்தி பிற விலங்குகளை வேட்டையதை எடுத்துரைக்கிறது பரசுராம அவதாரம். நிலத்தை உழுது பயிரத்தெரிந்து கொண்டதை உணர்த்துகிறது ஏற்கலப்பையுடன் இருக்கும் பரசுராம அவதாரம்.
பின்னர் ஆடுமாடுகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்த கற்றுக்கொள்கிறான். இது ஆயரான கிருஷ்ணாவதாரம். சமுதாய ஆட்சிமுறை அதை பலப்படுத்த போர் பயிற்சி பெற்ற மனித பரம்பரையின் வளர்ச்சியின் சரித்திரம் தான் ராமாவதாரம். கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும்.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - ஓய்வு
ரிஷபம் - குழப்பம்
மிதுனம் - நலம்
கடகம் - வெற்றி
சிம்மம் - சுகம்
கன்னி - நட்பு
துலாம் - அமைதி
விருச்சிகம் - கவனம்
தனுசு - முயற்சி
மகரம் - ஆர்வம்
கும்பம் - பயம்
மீனம் - எதிர்ப்பு

No comments:

Post a Comment