சாகச நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனமொன்றின் பணியாளரால் நாயைப் போன்று தெருவில் உலா செல்வதற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிங்கம், அவ்வழியாக சென்ற 9 வயது சிறுமி ஒருவரை வாயால் கௌவி இழுத்துச் செல்ல முயன்றதால் அந்த சிறுமி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் சேர்பியாவில் இடம்பெற்றுள்ளது.
நம்ரினி கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சிறுமி இசை வகுப்பிற்கு சென்று விட்டு தனது தாயாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சாகஸ நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தின் பணியாளர்கள் தலையிட்டு சிறுமியை சிங்கம் கடித்துக் குதறாது காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் செய்த புகாரையடுத்து குறிப்பிட்ட சாகஸ நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த கிராமத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறுமியின் தந்தையான கவ்றில் கொல்பஷ்னிகோவ் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தால் தனது மகள் கடும் மன அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக கூறினார். "சம்பவம் நடைபெற்ற போது நான் எனது மீன்பிடித் தொழிலுக்கு சென்றிருந்தேன். திரும்பி வந்த போது எனது மகள் நடுங்கிக் கொண்டிருந்தாள்" என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment