தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அவரை இரு வருட காலமாக வீட்டுடன் இணைந்த மரத்தாலான குடில் ஒன்றில் மனைவி ஒருவர் சங்கிலியால் கட்டி சிறை வைத்த சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது.
சிறிய கிராமமான ஹுவாயுயானைச் சேர்ந்த பப்லோ தமாரிஸ் கொராகுயில்லோ என்ற 86 வயது நபரே இவ்வாறு தனது மனைவியால் கட்டி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அயலவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் கட்டிலில் சிறை வைக்கப்பட்டிருந்த தமாரிஸை உள்ளூர் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மிகவும் பலவீனமடைந்த நிலையில் காணப்பட்ட அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி அவரது நலனுக்காகவே இவ்வாறு அவரை சங்கிலியால் கட்டி வைப்பதாக அவருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment