அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உலகின் அதி சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு ஏவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்த பிரளயம் ஏற்பட்டதற்கு 200 ஆண்டுகளுக்கு பின்னரான பிரபஞ்ச மாற்றங்களை பார்ப்பதற்கு வழி வகை செய்வதாக இந்த 'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கி அமையும் என நாசா விண்வெளி நிலையம் தெரிவித்துள்ளது. 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு நட்சத்திரங்களும் பால்வெளிகளும் தோற்றம் பெற்றன என்பதை கண்டறிய இந்த தொலைநோக்கி உதவும் என நம்பப்படுகிறது.
6.4 டன் நிறையுடைய இந்த விண்வெளி தொலைநோக்கியை உருவாக்க சுமார் 8.8 பில்லியன் டாலர் செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் பிரதான கண்ணாடி 21 அடி வட்டமுடையதாகும். இது பயன்பாட்டிலுள்ள ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் கண்ணாடியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு பெரியதாகும். இந்த தொலைநோக்கி 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏவப்படவுள்ளது.
No comments:
Post a Comment