ராவணன், கடல் என தொடர் தோல்விகளை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஓ காதல் கண்மனி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்த சில வருடங்களாக தோல்விகளை சந்தித்து வரும் மணிரத்னம் மறுபடியும் ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக இருந்தார்.
இதனால் இன்றைய இளைஞர்களுக்கு தகுந்தப்படி அலைபாயுதே பட பாணியில் ’ஓ காதல் கண்மனி’ படத்தை இயக்கினார். தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 800 தியேட்டர்களிலும், தமிழகத்தில் மட்டும் 250 தியேட்டர்களிலும் வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்தின் நான்கு நாள் வசூல் மட்டும் கிட்டத்தட்ட ரூ.14 என தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் அமெரிக்காவில் என்னை அறிந்தால் வசூலை முறியடித்துள்ளதாம் ஓகே காதல் கண்மனி.
படம் வெளியான 4 நாட்களில் அரை மில்லியன் டாலரை தாண்டியுள்ளதாம். இந்த வாரமும் கூட்டம் அலை மோதுகிறதாம். அமெரிக்காவின் டாப் 10 பாக்ஸ் ஆபிஸில் ஓ காதல் கண்மணி 9வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment