Thursday, 23 April 2015

இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த ஆம்ஆத்மி பெண் எம்.எல்.ஏ…!


காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தவர் அல்கா லம்பா (வயது 39). இவர் தற்போது ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. வாக உள்ளார். இவர் தன்னிடம் தவறாக நடந்ததாக கூறி இளைஞர் ஒருவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கவிஞர் மிர்சா காலிப் பாரம்பரிய மாளிகையை, பார்வையிடச் சென்ற போது அந்த நபர் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும், தனதருகே நெருங்கியதால் அவரை அடித்ததாகவும் எம்.எல்.ஏ. அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.
அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதையும் அவரது குடும்பத்தினர் அளிக்கவில்லை. அதனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அல்கா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment