பிரபல நகைக்கடையான கல்யாண் ஜுவல்லர்ஸுக்காக நடிகை ஜஸ்வர்யா ராய் நடித்துக் கொடுத்துள்ள ஒரு விளம்பரம் சர்ச்சையில் சிக்கியதையடுத்து அந்த விளம்பரம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் சென்னை தி.நகரில் பிரபல கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடை திறக்கப்பட்டது. அதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரங்களில் ஏற்கனவே நம்ம ஊர் இளசுகள் கடுப்பாகி வாட்ஸ் அப் பேஸ்புக் என சம்பந்த பட்ட நடிகர், நடிகைகளை கலாய்த்து வந்தனர்.
தற்போது இது முடிந்த நிலையில், அதன் விளம்பர தூதராக உள்ள பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் இதன் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதில் ஐஸ்வர்யாவுக்கு ஒரு கருப்பின சிறுவன் குடை பிடிப்பது போல அமைந்துள்ளது. இது இனவெறியைத் துண்டுவதாகவும், குழந்தை தொழிலை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாகவும் சில சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் இது தொடர்பாக ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கும் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த விளம்பரத்தை திரும்பப்பெறுவதாக கல்யாண் ஜுவல்லர்ஸ் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment