Thursday, 23 April 2015

மாஜி காதலனை வெறுப்பேற்ற திட்டம்.. நம்பர் நடிகையின் பக்கா ப்ளான்..!


தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நம்பர் நடிகையின் காதல் லீலைகளையும், அதனால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் அனைவரும் அறிவர். இதில் விரல் நடிகருடன் ஏற்பட்ட காதல் தோல்வியை கூட அவர் மறுந்துவிட்டார். ஆனால் நடன மாஸ்டருடன் ஏற்பட்ட காதல் தோல்வியை அவர் இன்னும் மறக்கவில்லையாம்.
சில வருடங்களுக்கு முன் நடன மாஸ்டரும், நம்பர் நடிகையும் தீவிரமாகக் காதலித்து வந்தனர். நடன இயக்குநரை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்துவரான நம்பர் நடிகை இந்து மதத்திற்குக் கூட மாறினார். இதை அறிந்த நடன இயக்குநரின் மனைவி விவாகரத்து கேட்டு கோர்ட்டு படியேறினார்.
அதன் பின் என்ன நடந்தோ தெரியவில்லை. நடன இயக்குநரும், நம்பர் நடிகையும் திருமணமும் செய்து கொள்ளாமல் திடீரெனப் பிரிந்தனர். ஆனால் அதற்கு பிறகு நம்பர் நடிகை போராடி தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மலையாள படம் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் நடிக்கும் போது அப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யும்போது தன்னையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற கண்டிஷனுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர். இதன் மூலம் நம்பர் நடிகை இந்திக்குள் நுழைவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவருக்கு இந்தியில் நடிக்க அழைப்பு வந்தது. அதை அவர் ஏற்காமல் மவுனம் காத்து வந்தார்.
நடன இயக்குநரை காதலித்தபோது அந்த வாய்ப்புகள் வந்ததால், பாலிவுட்டில் நடிக்க வேண்டாம் என்ற நடன இயக்குநரின் கண்டிஷனால் அவர் நடிக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் இப்போது நம்பர் நடிகை நடனத்தை வெறுப்பேற்ற முடிவு செய்துள்ளாராம். மாஜி காதலன் வலம் வரும் பாலிவுட்டில் தானும் ஒரு கலக்கு கலக்கி சவால்விட எண்ணி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment