Thursday, 23 April 2015

இரவு 9 – காலை 7 மணி வரை Free கால்ஸ்!!! BSNL அறிவிப்பு!!!


இந்தியாவின் நம்பர் 1 தொலைபேசி நிறுவனமான BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
BSNL லேண்ட்லைன் பயனாளர்கள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பில் இருக்கும் அனைவரும், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு லேண்ட்லைன் அல்லது செல்போன் நிறுவனங்களின் எண்களுக்கும் இலவசமாக பேசலாம் என்பது தான் அந்த திட்டம்.
இந்த திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புற வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர். இந்த திட்டமானது, BSNL தான் இழந்த தமது வாடிக்கையாளர்களை திரும்பப் பெறும் முயற்சியில் கொண்டுவரப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இத்திட்டம் வருகின்ற மே மாதம் 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSNL நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 1லட்சத்து 62 ஆயிரத்து 556 வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாக டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம் ஏர்டெல் நிறுவனம் அதிகபடியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.
இப்போதும் அதிக வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தில் இருந்தாலும், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களை பெறவும் இந்த புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

No comments:

Post a Comment