பிரகாஷ்ராஜூடன் தோனி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ‘ராதிகா ஆப்தே’.அதன் பிறகு ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிசெல்வன் உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு இந்தியிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவரைப்பற்றிதான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
காரணம் அண்மையில் இவருடைய நிர்வாண செல்பி படம் வாட்ஸ் அப்பிலும், இணையத்தளத்திலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஹாலிவுட் படமொன்றில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கதைக்கு தேவைப்பட்டதால், அப்படி நடித்தேன் என்று அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, நம் சமூகத்தில் ‘செக்ஸ்’ தவறாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவும் வாழ்வுக்கு முக்கியமானது தான். செக்ஸ் உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளும், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வது தவறில்லை என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தற்போது தெலுங்கில் ‘லயன்’ படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத் வந்த அவரிடம் பேட்டி கண்டபோது மீண்டும் செக்ஸ் குறித்து போல்டான பதில் அளித்து ஷாக் கொடுத்தார். ‘‘பசி எடுக்கும்போது உணவு தேவைப்படுகிறது. அதுபோல் உணர்ச்சிகள் பெருகும்போது செக்ஸ் தேவைப்படுகிறது. அதில் தவறு இல்லை’’ என்றார்.
ராதிகா ஆப்தே திருமணம் ஆனவர். கடந்த 2011ம் ஆண்டு லண்டன் சென்று டான்ஸ் கற்றார். அப்போது பிரிட்டிஷ் இசை அமைப்பாளர் பெனிடிக்ட் டெய்லர் என்பவருடன் நட்பு ஏற்பட்டு திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தார். ஒரு வருடத்துக்கு பிறகு அவரை மணந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment