Thursday, 23 April 2015

உலக சாதனை படைத்த திருநங்கைக்கு பரிசாக மரணம்!!?


பிரிட்டனில் உள்ள கார்லைல் நகரைச் சேர்ந்த மிக்கி நிக்கோல்சன் என்பவர் பிறப்பால் ஆணாக இருந்தாலும், ஹார்மோன் மாற்றத்தால் திருநங்கையாக மாறியுள்ளார்.
எனினும், இவர் சதுரங்க ஆட்டத்தில் மிகவும் ஆர்வம் காட்டி சிறந்துவிளங்கியுள்ளார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தேசிய சாம்பியனாக விளங்கினார். உலக அளவில், நடந்த சதுரங்க போட்டியில் 2014 ஆம் ஆண்டு வரை உலக சாம்பியன்களில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
இருப்பினும், தினந்தோறும் இழிவுச்சொற்களுக்கு ஆளாகியுள்ளார். பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், சொந்த நகரை சேர்ந்த மக்கள் என அனைவரும் அவர் திருநங்கை என்பதை கிண்டல் செயதுள்ளனர். இதனால் மனமுடைந்த மிக்கி ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து மிக்கியின் தோழி Anne கூறுகையில், ’உலக அளவில் சாதனை செய்த ஒரு சாம்பியனை உடலமைப்பை காரணமாக வைத்து உயிரை பறித்ததற்கு இந்த சமுதாயம் தான் பொறுப்பேற்க வேண்டும்’ என வேதனையுடன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment