Thursday, 23 April 2015

உங்கள் கணிப்பொறியில் Detect ஆகாத Pendrive சரி செய்வது எப்படி??

Pendrive நாம் தற்போது ஃபைல்கள் பரிமாற்றத்திற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒரு டிவைஸாக மாறிவிட்டது.
சில சமயங்களில் உங்களின் கணிப்பொறியில் இதனை இணைக்கும் போது Detect ஆகாது. இது பெரும்பாலும் புதிதாக வாங்கும் Pendrive –ல் அனைவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை தான்.
இது Pendrive வேலை செய்யவில்லை என்று நொந்து கொள்ளாதீர்கள். வேலை செய்யவில்லை என்று தூக்கி எறிவதற்கு முன்பாக, ஒரு சிறிய சொல்யூஷன் அதற்கு இருக்கின்றது. இதனை முயற்சி செய்து பார்கலாமே!!
Pendrive-ஐ சிஸ்டத்தில் சொருகவும்.
பின்பு டிவைஸ் மானேஜர் செல்லவும். அல்லது, Run –ல் devmgmt.msc என்று டைப் செய்யவும்.
அதில் Universal serial bus controllers-ஐ கிளிக் செய்யவும்.
இதில் உங்கள் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஸ்டோரேஜ் டிவைஸ்களும் காட்டப்படும்.
Detect ஆகாத Pendrive மஞ்சள் நிறத்தில் காட்டும்.
அதன் மீது ரைட் கிளிக் செய்து, அதனை Uninstall செய்யவும்.
பின்பு உங்கள் Pendrive-ஐ டிஸ்கனெக்ட் செய்து, சிஸ்டத்தினை ரிஸ்டார்ட் செய்யவும்.
ரிஸ்டார்ட் ஆனதும், உங்களின் Pendrive-னை கனெக்ட் செய்யவும்.
பெரும்பாலான நேரங்களில் இது உங்களின் பிரச்சனையை சரி செய்ய உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment