Thursday, 23 April 2015

சுவிஸ்ஸில் ரயில் ஓட்டுனர்களுக்கு பற்றாக் குறை: வெளிநாட்டவர்களை நியமிக்க திட்டம்!!


சுவிட்சர்லாந்தில் ரயில் ஓட்டுனர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அயல்நாடுகளைச் சேர்ந்தவர்களை ரயில் ஓட்டுனர்களாகப் பணியமர்த்த சுவிஸ் ரயில்வே துறை தீர்மானித்துள்ளது.
இந்தத் தகவலை சுவிட்சர்லாந்து மத்திய ரயில்வே நிறுவன (Swiss Federal Railways (SBB)) செய்தித் தொடர்பாளர் லியே மேயர் (Leah Meyer) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சுவிட்சர்லாந்தில் ரயில் ஓட்டுனர் பணியில் சேருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. இதனை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து திறமையான ஓட்டுனர்களை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த, வெளிநாட்டினர்களை சேர்ந்த 40 ரயில் ஓட்டுனர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கும் பொறுப்பை பேசில் மண்டலத்தை சேர்ந்த MEV Schweiz என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது சுவிஸ் ரயில்வே.
தேர்வு செய்யப்படவர்களில், ஜேர்மனி நாட்டை சேர்ந்த ஓட்டுனர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுவிஸ் மத்திய ரயில்வே துறையில் தற்போது நன்கு பயிற்சி பெற்ற சுமார் 3,000 ஓட்டுனர்கள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம், ஓட்டுனர்களின் பற்றாக்குறை காரணமாக 50 புதிய ஓட்டுனர்களை பணியில் அமர்த்த, அல்லது ஓய்வு பெற்ற ஓட்டுனர்களை திரும்ப பணியில் அமர்த்த உள்ளதாக சுவிஸ் ரயில்வே நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட உள்ள 40 ஓட்டுனர்களையும் உடனடியாக பணியில் அமர்த்த முடியாது என்றும், அவர்களுக்கு குறைந்தது 10 மாதங்கள் ஓட்டுனர் பயிற்சி வழங்குவது அவசியம் என்றும் சுவிஸ் ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment