Thursday, 23 April 2015

செம்மரம் கடத்தி சொகுசு வாழ்கை வாழும் நடிகை!!!


கடந்த ஏப்ரல் 7ம் தேதி, ஆந்திர வனப்பகுதியில், செம்மரம் கடத்தியதாக, தமிழகத் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. இச்சமபவம் குறித்து ஆந்திர அரசும் காவல்துறையும் சரியான விளக்கம் அளிக்கவில்லை.
அதே வேளை, இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை என்ற சர்ச்சையான கருத்தும் வெளியானது. இது குறித்து தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இச்சம்பவத்தை அடுத்து செம்மரக்கடத்தல் கும்பல்களை கூண்டோடு பிடிப்பதில் ஆந்திர போலீஸார் கடும் முயற்சி செய்துவருகின்றனர். இதில் நேற்று முந்தினம், தமிழ் சினிமா நடிகர் சரவணன் என்பவர் பிடிபட்டார்.
இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதை அடுத்து இச்சம்பவத்தில் நடிகை ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஊடகங்களில் வெளியான தகவல் பின்வருமாறு:
நடிகர் சரவணனின் கைதைத் தொடர்ந்து ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ராமுடு நிருபர்களிடம் கூறுகையில்,
”செம்மர கட்டைகள் கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு படத்தில் நடித்துள்ளதோடு, தனது பினாமிகள் மூலமாக பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை தயாரிக்க நிதி உதவி செய்துள்ளார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் பலருடன் இவருக்கு தொடர்பு உள்ளது.
அவர்களுக்கு தனது சொந்த செலவில் ஆடம்பர பங்களாக்களையும், விலை உயர்ந்த கார்களையும் பரிசளித்து உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சரவணனின் வங்கி கணக்கு மூலமாக யாருக்கெல்லாம் பண பரிமாற்றம் நடந்துள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில் பல முக்கிய புள்ளிகள், சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
செம்மர கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களில் பலர் சென்னையை மையமாக வைத்து தொழில் செய்து வந்துள்ளார்கள். சரவணனின் சகோதரர் லெட்சுமணன் என்பவரும் ஒரு படத்தில் தயாரிப்பாளராக இருந்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது,” என்று கூறினார்.
இதை அடுத்து சரவணன் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தப்பி ஓடிய ரவி, சண்முகம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர் களின் குடோனில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள செம் மரக்கட்டைகள் பறிமுதல் செய்யபபட்டது.
இதற்கிடையில், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட் டத்தைச் சேர்ந்த மஸ்தான் வலி என்பவரும், அவரது சகோதரர் சங்கர்நாயக் என்பவரும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இந்த தகவல் கிடைத்த உடனேயே மஸ்தான் வலியைபோலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தின் மூலம் சினிமாபடம் தயாரிப்பில் ஈடபட்டதும், அவரது படத் தில் கதாநாயகியாக நடித்த நடிகை நீத்து அகர்வாலை காதலியாக வைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தியதும் தெரிய வந்தது.
மஸ்தான் வலி தெலுங்கில் ’பிரேம பிரயாணம்’என்ற பம் தயாரித்தார். அதில் நீத்து அகர்வால் கதாநாயகி யாக நடித்துள்ளார். மஸ் தான்வலியிடம் மேலும் விசாரித்தபோ செம்மரக் கடத்தலில் நடிகை நீத்து வுக்கும் தொடர்பு இருப்பக தெரிவித்து உள்ளார். மஸ்தான் வலி செம்மரக் கடத்தலில் கிடைத்த பத்தை நடிகை நீத்துவிடம் கொடுத்து அவரது வங்கி கணக்கில் போட்டுள்ளார். பின்னர் வங்கி கணக்கில் இருந்து தனக்கு தேவைப்படும் போ£து தேவையான பணத்தை எடுத்து இருக்கிறார்.
இதையடுத்து போலீசார் மஸ்தான்வலி, நடிகை நீத்து அகர்வால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மஸ்தான்வலி கைது செய்யப்பட்டார். போலீசார் நடிகை நீத்துவை கைது செய்யச் சென்றபோது தலை மறைவாகி விட்டது தெரிய வந்தது. அவர் பெங்களூர் அல் லது முமபையில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவரை கைது செய்ய தனிப்படைகள் விரைந்துள்ளன. நடிகை நீத்துக்கு மஸ்தான்வலி ரூ.35 லட்சம் மதிப்புள்ள பங்களா கட்டி கொடுத்துள்ளார். அதில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment