ஏப்ரல் 24
ஜி.யு.போப் பிறந்த தினம்!!!
ஜி. யு. போப், 1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் என்னுமிடத்தில் ஜோன் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.
19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். கிறிஸ்தவசமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞானசிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார்.
தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு என்ற பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம்,நாலடியார் போன்ற நூல்களை கற்றார்.
சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால்,அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தககைய கருத்து எதுவும் இல்லை.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1968 – மொரீசியஸ் ஐநாவில் உறுப்பினரானது.
1970 – சீனா தனது முதல் செயற்கைக் கோளை ஏவியது.
1970 – காம்பியா குடியரசு தினம்.
1973 – இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம்.
1981 – ஐபிஎம்-ன் முதல் டெஸ்க்டாப் வெளியானது.
.jpg)
No comments:
Post a Comment