Thursday, 23 April 2015

தின பலன் 24-04-2015


தெரிந்து கொள்வோம்: நெற்றியில் திலகமிடுவது ஏன்…??
பொதுவாக பெண்கள், ஆண்கள் அனைவருமே நெற்றியில் திருநீறு, நாமம் அல்லது குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது.
இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் அதுவே.
யோகக்கலை இதனை ஆக்ஞா சக்கரம் எனக் குறிப்பிடுகிறது. இந்த இடம் எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிபடுத்துகிறது. அதிலும், முன் நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம்.
நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கிறது.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்:
மேஷம் - சினம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - நற்செயல்
கடகம் - உறுதி
சிம்மம் - கோபம்
கன்னி - தனம்
துலாம் - பயம்
விருச்சிகம் - இன்பம்
தனுசு - போட்டி
மகரம் - பொறுமை
கும்பம் - தாமதம்
மீனம் - வரவு

No comments:

Post a Comment