தற்போதைய கால கட்டத்தில் கோலிவுட் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிக அரிதான காரியமாகும். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அதை தக்க வைத்து கொள்ள ரொம்ப போராட வேண்டியது இருக்கும். அப்படி போராடிதான் வளர்ந்து வருகிறார் நடிகை ப்ரியா ஆனந்த்.
தமிழ் பேச தெரிந்த நடிகை என்ற ஒரே ப்ளஸ் பாய்ண்டை வைத்து கோலிவுட்டிற்குள் நுழைந்தவர். ஆனால் சமீபக்காலமாக இவர் யாருடன் நடித்தாலும், அந்த கதாநாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அதர்வா, கௌதம் கார்த்தி, விக்ரம் பிரபு ஏன் அனிருத்தை கூட விட்டு வைக்கவில்லை இந்த வதந்திகள்.
இதனால் கோபமடைந்த ப்ரியா ஆனந்த் நானும் எத்தனை நாயகர்களைத்தான் காதலிக்க முடியும்? படப்பிடிப்பின்போது நாயகனுடன் பேசாமல் இருக்க முடியாது. பேசினால் காதல், ஒன்றாக சாப்பிட்டால் காதல் என்று கதைகட்டுகிறார்கள்.
‘நாயகனுடன் காதல்’ வகை கிசுகிசுக்கள் போரடிக்கின்றன. அதில்கூட புதுமையாக யோசிக்கலாமே.. சரி, இதெல்லாம் படத்துக்கான விளம்பரம் என்று நினைத்து விட்டுவிட்டேன். என்னைப் பொறுத்தவரை, என் வேலையை மட்டுமே தீவிரமாக காதலிக்கிறேன் என்றார்.

No comments:
Post a Comment