Thursday, 23 April 2015

ஐ.பி.எல் 8: 37 ரன்களால் வெற்றி பெற்ற டெல்லி அணி..!


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 21வது ஆட்டத்தில் டெல்லி அணி மும்பை அணியை 37 ரன்களால் அமோக வெற்றியை பெற்றது. இந்த 8வது ஐ.பி.எல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதினர். இந்தப் போட்டியானது டெல்லி பெரோஷா கோட்லா என்ற மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ஆரம்பத் ஆட்டக்காரரான களமிறங்கிய மயான்க் அகர்வாலும் ஸ்ரீரியாஸ் ஐயரும் ஆடிவந்த வேளையில் மயான்க் அகர்வால் (1) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் டூமினி மற்றொரு ஆரம்பத் ஆட்டக்காரரான ஸ்ரீரியாஸ் ஐருடன் ஜோடி சேர்ந்து ரன்களை எடுக்க ஆரம்பித்தனர். அந்த அணி 156 ரன்களை எடுத்திருந்த போத ஸ்ரீரியாஸ் அரைச்சதம் தாண்டி (83) ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் (17) ரன்களையும் , அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் ஆட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார் இவர் (2) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் டெல்லி அணி 20 ஒவர்களில் 4 விக்கட்டை இழந்து 190 ரன்களை எடுத்திருந்தது. டெல்லி அணித்தலைவர் டூமினி ஆட்டமிழக்காமல் அரைச்சதம் தாண்டி (78) ரன்களை எடுத்தார்.
மும்பை அணியின் பந்துவீச்சில் மிச்சேல் மக்கேல்சன் 2 விக்கட்டையும் மாலிங்கா 1விக்கட்டையும் கைப்பற்றினர். இதேவேளை மும்பை அணிக்கு 191 ரன் இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஒவர்களில் 9விக்கட்டை இழந்து 153 ரன்களை மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 37 ரன்களால் தோல்வியை தழுவியது. மும்பை அணியின் ஆட்டத்தில் பார்த்திவ் படேல் (28) ரன்களையும், அணித்தலைவர் ரோஹித் சர்மா (30) ரன்களையும், அம்பதி ராயுடு (30) ரன்களையும் எடுத்தனர். ஏனைய வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டெல்லி அணியின் பந்துவீச்சில் இம்ரான் தாகிர் 3விக்கட்டுக்களையும், அமித் மிஸ்ரா , ஏஞ்சசேலா மேத்யூஸ் ஆகியோர் தலா 2விக்கட்டையும் கைப்பற்றினர். நேற்றைய போட்டியில் ஆட்டத்தில் பிரகாசித்த ஸ்ரீரியாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment