பாலிவுட்டில் எத்தனை நடிகைகள் வந்தாலும் யாரும் அசைக்க முடியாத கதாநாயகியாக வலம் வருப்பவர் தீபிகா படுகோனே. இவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகி வருவதால் பாலிவுட் நடிகர்கள் பலர் தீபிகா படுகோனேவையே கதாநாயகியாக்க வேண்டும் என்று போட்டி போடுகின்றனர்.
இவர் தற்போது தமாஷா, பிக்கு உட்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார் என்று கடந்த சில வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் தங்களின் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் உள்ளனர்.அடுத்த ஆண்டு ரன்வீருக்கும், தீபிகாவுக்கும் திருமணம் நடக்கக்கூடும் என்று கூட பேச்சு அடிப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி தெரிவித்துள்ளார் தீபிகா. தீபிகாவுக்கு குழந்தைகள் என்றால் உயிராம். அதனால் ஒன்றல்ல, இரண்டல்ல 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் தீபிகா. ஆமாம் கல்யாணத்துக்கு அப்புறம் தானே..?

No comments:
Post a Comment