Thursday, 23 April 2015

வெயிலால் ஏற்படும் கருமையை போக்குவது எப்படி!!?


கோடை வந்துவிட்டது!!! வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பெண்கள் தங்களை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் கருமையில் இருந்து காத்துக்கொள்ள பல காஸ்மெட்டிக் ட்ரீட்மென்ட்களுக்கு மணிக்கணக்கில் நேரத்தை செலவழிப்பதுடன், பணத்தையும் அதிகமாக கரைத்துவிடுவர்.
வீட்டிலேயே நாம் பயன்படுத்தும் பொருட்கள் மூலமாக இதனை எளிதாக நீக்கலாம். அதனை எப்படி செய்வது என்று பார்கலாம்!!
எலுமிச்சை:
எலுமிச்சை சாறு வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தோலின் கருமையை போக்குவதில் சிறந்தது. எலுமிச்சை சாறை நேரடியாகவே உங்கள் சருமத்தில் பாதிப்படைந்த பகுதியில் தடவவும். உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு அலசவும். இது நல்ல பலனை அளிக்கும். எலுமிச்சை சாறுடன் தேனைக் கலந்து இதுபோல் செய்வதும் நல்ல பலனைத் தரும்.
வெள்ளரி:
வெள்ளரி உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதுவும் சருமத்தின் கருமையை போக்க வல்லதாகும். இதில் இருக்கும் விட்டமின் சி, உங்களின் சருமத்தினை ஈரப்பதத்துடன் பாதுகாக்கும். வெள்ளரியுடன், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை கொண்டு ஒரு ஃபேஸ் பேக்கை உருவாக்கவும். அதனை முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து நீக்கிவிடவும். இதன் ரிசல்ட்டினை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்.
தக்காளி:
தக்காளியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள், மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றது. தக்காளியுடன், சிறிது தயிர் மற்றும் சிறிது ஓட்ஸ் மீல் சேர்த்து முகத்தில் தடவவும். 5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
உருளைகிழங்கு:
உருளைக்கிழங்கும் சருமத்தின் கருமையை போக்குவதில் சிறந்ததாக விளங்குகின்றது. உரித்த உருளைகிழங்கை நன்றாக அரைத்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

No comments:

Post a Comment