Wednesday, 18 March 2015

சைட்டிஷை சாப்பிட்டு போதையாகும் விசித்திர நபர்!!


இங்கிலாந்தைச் சேர்ந்த நிக் ஹெஸ் (Nick Hess) என்பவர் வெறும் உருளைக் கிழங்கை சப்பிட்டே போதையாகி விடுகிறாராம். எப்படி என்று மேலே படியுங்கள் தெரியும்… நிக் ஹெஸ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.
சமீக காலமாக இவர் விச்சித்திரமாக நடந்து கொள்கிறார். பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும் இவர் காலையில் எழுந்துகொள்ளாமல், சொங்கிக் கிடப்பது குடிகாரர்களைப் போல் வாந்தி எடுப்பது, வழக்கமாகிவிட்டது.
இதனால், இவரது மனைவியிடம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிக் வீட்டிற்கு தெரியாமல் தினமும் இரவு குடிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து நிக்கின் மனைவி அவருடன் பேசிப் பார்த்துள்ளார், அவர் பேசியதில் தான் எந்த கெட்ட பழக்கமும் வைத்திருக்க வில்லை என்றும், தனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை என்றும் சாப்பிட்ட பின், அவ்வப்போது போதையாக உணர்வதாகவும் தெரிவித்தார்.
இருந்தாலும், அவரது மனைவில் இரவு அவர் தூங்கியது வீடு முழுவதும் மது பாட்டில்கள் அல்லது போதைப் பொருள் இருக்கிறதா என்று சோதனை செய்துள்ளார். ஆனால் எந்தப் பயனும் இல்லை. இறுதியாக நிக்கை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில், நிக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், நிக்கின் வயிறு, தானாகவே மதுவை(ஆல்கஹாலை) உற்பத்தி செய்வதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் தான் நிக் அடிக்கடி குடிகாரர் போல் நடந்து கொள்வதாகவும் விளக்கியுள்ளனர்.
இந்த விச்சித்திரமான நிலைக்கு, 'auto-brewery syndrome’ என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நிக்கின் வயிற்றில் சேரும் கார்போஹைட் ரேட்கள் யீஸ்டாகவும், ஆல்கஹாலாகவும் மாறுவதால் தான் அவருக்கு போதை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கும் நிக்கிற்கு இந்த , 'auto-brewery syndrome’க்கு மாற்று மருந்து கொடுக்கப்படுவதுடன் கார்போஹைட்ரேட்டும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிக்கின் இந்த விச்சித்திரமான நோய் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment