Wednesday, 4 March 2015

”உன்னைச் சுட்டுக் கொல்லுவோம்!!” ஹசாரேவுக்கு கனடியர்கள் மிரட்டல்..!


கனடாவில் வசித்து வரும் இருவர், ஊழலுக்கு எதிராகப் போராடிய அண்ணா ஹசாரேவை சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று கனடியர்கள் இரண்டு பேர் பேஸ்புக் வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இருந்து வர்தாவில் உள்ள காந்தி ஆசிரமம் வரை 1,100 கிலோமீட்டர் பாத யாத்திரை செல்ல உள்ளார் அண்ணா ஹசாரே.
ஹசாரே சுமார் 3 மாத காலம் தொடர்ந்து யாத்திரை மேற்கொண்டு இந்த தூரத்தை கடக்க உள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக, அன்னா ஹஸாரேவுக்கு அசோக் கௌதம் என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் கனடாவைச் சேர்ந்த அகன் விது, அவரது நண்பர் நீல் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
தானேவின் கல்யாண் பகுதியில் வசித்து வரும் 57 வயதான அசோக் கௌதம், ஹசாரேவுக்கு நெருக்கமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக்கில், அகன் விது மற்றும் நீல் இருவரும் இந்தியா வந்து அண்ணா ஹசாரேவை கொல்லுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதை அடுத்து, அசோக் கௌதம் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கனடாவில் உள்ள அகன், நீல் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல் நடவடிக்கையாக, அவர்கள் மிரட்டலுக்கு பயன்படுத்திய, கணிணியின் ஐ பி முகவரியை கண்டுபிடுக்க முயன்று வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment