இந்திய முஸ்லீம்கள் சலுகை எதிர்பார்த்தால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சிவசேனா கட்சி தங்களின் சாம்னா பத்திரிக்கையில் கூறியுள்ளது.
சாம்னாவின் தலையங்கத்தில் இந்தக் கட்சி இவ்வாறு கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ’இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் சலுகை எதிர்பார்த்தால், முதலில் அவர்கள் இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக் கொண்டு ’வந்தேமாதரம்’ என்று முழங்க வேண்டும்.
அவர்கள் இடஒதுக்கீடு கேட்பது, கேட்பது தவறில்லை. இந்திய பிரஜையாகக் கேட்கலாம். ஆனால் அவர்கள் மதத்தின் பேரில் இட ஒதுக்கீடு கேட்பது முறையற்றது.இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியில் தானே தவிர மத அடிப்படையில் இல்லை.
அவர்கள் அவர்களுடைய மதத்தினை இறுகப்பற்றிக் கொண்டே இந்தியாவில் சலுகை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி அவர்கள் சலுகை வேண்டுமென நினைத்தால் பாகிஸ்தான் தான் செல்ல வேண்டும்.’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment