Monday, 23 March 2015

கசியவிட்டார் அம்மா.. பயத்தில் த்ரிஷா..?


சமீபத்தில் நடிகை த்ரிஷா தயாரிப்பாளர் வருண் மணியனை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
நிச்சயதார்தத்திற்கு பிறகு இவர் திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் வரிசையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.
தமிழில் ஜெயம் ரவியுடன் அவர் நடித்துள்ள ‘பூலோகம்’, ‘அப்பாடக்கர்’படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸாக இருக்கிறது. அதைத்தவிர செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ஒரு படம், இரு மொழிகளில் உருவாகும் ‘போகி’, தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ‘லயன்’ படம் , தனது மேனேஜர் தயாரிக்க உள்ள புதுப்படம் என்று ஏகப்பட்ட படிங்களில் நடிக்க உள்ளார் த்ரிஷா.
இதில் தனது மேனேஜர் தயாரிக்கும் படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், ‘கதை கேட்டேன், பிடித்திருந்தது. திகில் கலந்த காமெடி படம். கோவி இயக்குகிறார். மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. தவிர, மேலும் 2 தமிழ்ப் படங்களில் நடிக்க உள்ளேன்’ என்றார்.
சினிமாவில் பிசியாகி விட்டதால், இந்த ஆண்டு இறுதியில் த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நடக்க இருந்த திருமணம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் என்று த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் உறுதி செய்துள்ளார். இத்தனை நாள் தனது திருமண நாளை மறைத்து வந்த த்ரிஷா அவருடைய அம்மா அவரப்பட்டு கசியவிட்டதால் வருத்தத்தில் இருக்கிறாராம்.
எங்கே தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்து தூக்கிவிடுவார்களோ என்று அவர் பயப்படுகிறாராம். ஏற்கனவே அந்த பயத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்த பிறகும்கூட திருமணத் தேதியை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment