லண்டனில் 530 வருடங்களுக்கு முன் இறந்த மன்னரின் உடல் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்படுகிறது.
1485ஆம் ஆண்டு நடந்த போரில் இறந்த மன்னர் 3ஆம் ரிச்சர்டு. இவர் இங்கிலாந்தின் கடைசி அரசராக கருதப்படுகிறார். இவரது உடல் லிசெஸ்டரில் உள்ள தேவாலயத்தின் அருகே புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு ஆராய்ச்சி செய்த ஆராய்சியாளர்கள் மன்னரின் உடலைக் கண்டுபிடித்தனர். அவரது முழு எலும்புக் கூடு கிடைத்தது.
பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளுக்குப் பிறகே அது 3ஆம் ரிச்சர்டின் உடல் என்று உறுதி செய்தனர். அவர் இறந்து 530 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் வருகிற மார்ச் 26ஆம் தேதி அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

No comments:
Post a Comment