Thursday, 5 March 2015

இன்றைய தினம்....!! (மார்ச் 6)


மார்ச் 6
1079
ஈராணிய நாட்காட்டி, உமர் கயாமால் திருத்தி அமைக்கப்பட்டது…!!
இந்தியாவின் இந்து நாட்காட்டிக்கு இணையானது ஈராணிய நாட்காட்டி. உலகில் அதிக ஆண்டுகள் பயன்படுத்தப்படும், பழமையான நாட்காட்டிகளுள் ஒன்று.
ஜலாலி நாட்காட்டி என்று அழைக்கப்படும் இந்த நாட்காட்டி, 11ம், 20ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை, உமர் கயாம் என்ற ஈராணைய வானியலாளர் 1079ம் ஆண்டு திருத்தி அமைத்த தினம் இன்று. 1000 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருக்கும் இந்த நாட்காட்டி இன்று உலகம் முழுவதும், பயன்படுத்தப்படும் கிரிகோரியன் நாட்காட்டியை விட துல்லியமானது என்று கூறப்படுகிறது.
இது, இந்துக்களின் பஞ்சாங்க நாட்காட்டியை ஒத்த, சூரியனின் துல்லியமான நகர்வை வைத்து கணிக்கப்பட்டதாம். எனினும், இந்த நாட்காட்டி 1925ம் ஆண்டு நவீன நாட்காட்டிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது.
இதனால், இதன் துல்லியத் தன்மை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பழைய ஜலாலி நாட்காட்டியில் இருந்தது போன்ற வானிலை கணிப்பு, தற்போதைய நவீன ஈரானிய நாட்காட்டியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1790 - மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1967 - திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
1975 - ஈரானும் ஈராக்கும் எல்லை தொடர்பான உடன்பாட்டிற்கு வந்தன.
இன்றைய சிறப்பு தினம்
சுதந்திர தினம் (கானா)
நேர்மையின் ஐரோப்பிய தினம் (European Day of the Righteous) (ஐரோப்பா)

No comments:

Post a Comment