Monday, 23 March 2015

ஐந்து திருமணங்கள் செய்த நடிகர்.. 2-வது முறை விவாகரத்து செய்யும் மனைவி!


கிக் பாக்ஸர், லயன் ஹார்ட், டபுள் இம்பாக்ட், குங்ஃபூ பாண்டா 2 போன்ற பல படங்களில் நடித்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் வேன் டேம் (Van Damme).இவர் அதிகமாக ஆக்‌ஷன் படங்களிலேயே நடித்து புகழ் பெற்றதால் ரசிகர்கள் இவரை 'மசல்ஸ் ஒவ் பிரசல்ஸ்’ என்று அழைப்பார்கள்.
54 வயதான இவர் இதுவரை ஐந்து திருமணங்கள் செய்துள்ளார். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் ஒரு பெண்ணை மட்டும் இருமுறை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1980ஆம் ஆண்டு முதல் திருமணமும், 1985ஆம் ஆண்டு இரண்டாவது திருமணமும் செய்த வேன் டேம், இருவரையும் விவாகரத்து செய்த பின்னர் மூன்றாவதாக கிளாடிஸ் போர்த்துகீஸ் ( Gladys Portugues) என்ற பாடிபில்டர் பெண்ணை மூன்றாம் முறையாக திருமணம் செய்தார்.
ஆனால் 1994ஆம் ஆண்டு மற்றொரு நடிகையை திருமணம் செய்ததால் கிளாடிஸை விவாகரத்து செய்த வேன் டேம், மீண்டும் கடந்த 1999 ஆம் ஆண்டு அவரையே மறுமணம் செய்து கொண்டார். த
ற்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிளாடீஸ் விவாகரத்து மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், இருவரும் மிக விரைவில் சட்டரீதியாக பிரிந்துவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment