மார்ச் 20
உலக சிட்டுக் குறுவிகள் தினம்
மனிதர்களின் முன்னேற்றங்களால், அழிந்து வரும் சிட்டுக் குறுவிகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் நாள் இன்று. 1990ம் ஆண்டிலேயே உலகம் முழுவதும், சிட்டுக் குறுவி (அறிவியல் பெயர்: Passeridae) என்ற இனம் அழிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுவாக உலகில் பல உயிரினங்கள் அழிவதற்குக் காரணம் மக்கள் தொகை பெருக்கம் தான். ஆனால், இந்த சிட்டுக் குறுவிகள் அழிவதற்குக் காரணம் மனிதர்களின் நவீன வளர்ச்சி தான். அந்த காரணங்களில் சில:
* வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.
* எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
* பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
* வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.
* செல் தொலைபேசி வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. செல் தொலைபேசிக் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1726 - ஐசாக் நியூட்டன், அறிவியல் துறையின் முக்கிய அறிவியலாளர், மறைந்தார்.
1916 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
1934 - ஜப்பானில் ஹாக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்து சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
சர்வதேச ஜோதிட தினம்
உலக கதை-வாசிக்கும் தினம்
சுதந்திர தினம் (துனீசியா)
சர்வதேச மகிழ்ச்சி தினம் (ஐக்கிய நாடுகள்)
.jpg)
No comments:
Post a Comment