Wednesday, 18 March 2015

இன்றைய தினம்....!! (மார்ச் 19)


மார்ச் 19
தமிழ் ஈழ தேசத்துக்காக உண்ணாநிலையில் அறப்போர் புரிந்து மாண்டார் அன்னை பூபதி..!!
1988
தமிழ் ஈழப் போர் நடந்து கொண்டிருந்த காலம். இலங்கை இராணுவத்துடன் இந்திய அமைதிப்படையினரும் சேர்ந்து இலங்கையின், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் கடும் போர் புரிந்து வந்தன.
இந்நிலையில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் சிலர் சேர்ந்து அண்ணையர் முன்னணி என்ற அமைப்பின் சார்பாக அறவழியில் போரை நிறுத்த முடிவு செய்தனர்.
சில கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அமைதிப் படைக்கு எதிராக இந்திய தேசத் தந்தை காந்தியின் வழியில் அறவழியில் போராட்டம் செய்தனர். ”உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.
புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.” என்ற இரண்டே கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடங்கினர். இரண்டுமுறை, இந்த அண்ணையர் முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால், இவர்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இதனால், மார்ச் 19ம் தேதி கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டு சாகும், உண்ணா நோன்பினைத் தொடங்கினார் அன்னை பூபதி. இதற்கு முன்னதாகவே, தன் 10 பிள்ளைகளும், கணவரும் தன் உண்ணா நோன்பினை எந்த விதத்திலும் கலைக்கக் கூடாது என்று கடிதம் எழுதி வைத்து விட்டார்.
நீர் மட்டும் அருந்தி வந்த அவர், சரியாக 1 மாதம் கழித்து ஏப்ரல் இதே நாளன்று உயிர்துறந்தார். இவரது மறைவு தினம், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாகவும் நினைவு கூறப்படுகிறது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1932 - சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
1972 - இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
2002 - ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
இன்றைய சிறப்பு தினம்
தந்தையர் தினம் (ஸ்பெயின், போர்த்துக்கல், பெல்ஜியம், இத்தாலி, ஹோண்டுராஸ், மற்றும் பொலிவியா)

No comments:

Post a Comment