Wednesday, 18 March 2015

சிம்பு, சூர்யாவை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே பவர் ஸ்டார்..!


பல திரையுலக பிரபலங்கள் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நமக்கு தெரியும்.
இந்த சமூக தளங்களின் மூலம் அவர்கள் தங்கள் கருத்துகளை ரசிகர்களுடன் பகிந்துகொள்ளவும், எளிதில் ரசிகர்களை தொடர்புகொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர். இது பவர் ஸ்டாருக்கு மட்டும் விதிவிலக்கா..
இதில் பவர் ஸ்டாரும் ஒரு டுவிட்டர் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு அவர் செய்யும் கலாட்டக்களை பார்த்து சிரிப்பதா? அல்லது கோபப்படுவதா? என்று ரசிகர்களுக்கே தெரியவில்லை. அட ஆமாங்க நம்ப நாட்டில் எவ்வளவோ பிரச்சனையிருந்தாலும் இவர் செய்யும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.
சமீபத்தில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில், சூர்யா மற்றும் சிம்புவை கிண்டல் செய்துள்ளார். சூர்யா டுவிட்டரில் வந்ததைத் தொடர்ந்து அவரை வரவேற்கும் விதமாக இவர் என்ன சொன்னார் தெரியுமா ? . “ஹாய், பிரதர் சூர்யா, டுவிட்டருக்கு உங்களை வரவேற்கிறேன். உங்களை நான் ஃபாலோ செய்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள், நான் அதை செய்ய மாட்டேன்,” என்று டுவீட் செய்திருக்கிறார்.
அதோடு விட்டாரா, சில மணி நேரங்களுக்கு முன் “தம்பி சிம்பு, 'வாலு'ன்னு வச்சதுனாலதான உன் படம் ரிலீஸ் ஆகலை போல, பேசாம 'தல'ன்னு பேரு வச்சி ரிலீஸ் பண்ணுங்க, கண்டிப்பா ஹிட் ஆகும்,” என ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.
சும்மா இருக்க சங்க ஊதி கெடுத்த கதையா இருக்கு இந்த பவர் ஸ்டார் பண்ற வேலை...

No comments:

Post a Comment