Tuesday, 24 March 2015

சிவகார்த்திகேயனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் சமீபத்தில் திடீரென டுவிட்டரில் ரசிகர்களிடம் உரையாட வந்தார். அப்போது ரசிகர்கள் ஒரு கேள்வி கேட்க, அவர் ஒரு பதில் சொல்ல.. அவ்வளவு தான் சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்து விட்டனர் ரசிகர்கள்..
பொதுவாகவே பிரபலங்கள் ரசிகர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக பேச வேண்டும். தெரியாமல் எசக்குபுசக்காக வார்த்தையை விட்டால் அவ்வளவு தான்.. இன்னைக்கு சிக்கிடுச்சுடா இந்த ஆடு என்று கலாய்த்து தள்ளி விடுவார்கள். அப்படி தான் மாட்டிக்கொண்டார் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் திடீர் அறிவிப்பாக அறிவித்து ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாட வந்தார் சிவகார்த்திகேயன். ரசிகர்களும் ஆர்வத்தோடு அவருடம் உரையாட வந்தனர்.
அப்போது ஒரு ரசிகர், “உங்களுக்கு பிடித்த ஹாலிவுட் படம் எது?” என்று கேட்டார். அதற்கு சிவகார்த்திகேயன் சற்றும் யோசிக்காமல், 3 இடியட்ஸ் என்று பதில் அளித்தார். அது பாலிவுட் படமாச்சே, என்று ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதிலும் ஒரு ரசிகர் “3 இடியட்ஸ் எப்ப ஹாலிவுட் படமாச்சு?” என்று கிண்டலாகக் கேட்டேவிட்டார்.
“படத்த சைலண்ட்ல வச்சுட்டு சப்டைட்டில்ல பார்த்தப்ப ஆச்சு” காமெடியாக அதற்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்தார். தவறுதலாக பதில் சொல்லிவிட்டு அதை காமெடியாக மாற்றியது சிவகார்த்திகேயனின் சமாளிபிகேஷன்தான் என்று ஃபேஸ்புக், டுவிட்டரில் சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.
பொதுவாக சிவகார்த்திகேயன் தான் எல்லோரையும் கலாய்ப்பார். ஆனால் இப்போது அவரே சிக்கிவிட்டார்...

No comments:

Post a Comment