இந்தியாவில் எந்த சமூக வலைதளத்தை விடவும் வாட்ஸாப்பின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. வாட்ஸாப்பில் தினம் ஒரு வீடியோ வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
கடந்த சில தினங்களாக, சென்னை போலீஸ் உதவி கமிஷ்னரின் ஆடியோ தமிழ்நாட்டை உலுக்கியது. இது தவிற, கடந்த சில மாதங்களாகவே, இந்தியாவில் நடைபெற்ற கற்பழிப்பு வீடியோ போன்றவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இவற்றைத் தொடர்ந்து, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஜோடி ஒன்றை கும்பல் ஒன்று, கடத்திச் சென்று தாக்கும் வீடியோ பரவிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவில், உத்திரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற நகரைச் சேர்ந்த இளம் பெண் மற்றும் அவரது நண்பர் பைக்கில் மார்கெட்டுக்குச் சென்று கொண்டுள்ளனர்.
அவர்களை வாகனத்தில் வந்த மர்மக் கும்பல் ஒன்று முற்றுகை இட்டு புறநகர் பகுதிக்கு அழைத்துச் செல்கிறது. அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளது. இளம் பெண்ணின் கண்ணத்தில் அறைகள் விழுவதுடன், கால்களாலும், எட்டி உதைக்கின்றனர். அவருடன் வந்த வாலிபருக்கு மரக்கிளைகளால் அடி கிடைக்கிறது. தாக்குபவர்களை மறித்து அந்த பெண் தன் நண்பரைக் காப்பாற்ற நினைக்கிறாள்.
அவர்களை அண்ணா என அழைக்கிறார். அந்த பையனை தனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்றும் அவன் தனது பள்ளி தோழன் என்றும் கூறுகிறார். கருணை காட்டும் படி அவர் மன்றாடுகிறார். அவர் அந்த பையனை காப்பாற்ற முயற்சிக்கிறார்.
அந்த பையன் பைக்கிற்கும் பெண்ணுக்கும் இடையே மறைந்து நின்று கொள்கிறார். இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் கும்பலைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்தார். மற்றொருவர் ஏன் படம் பிடிக்கிறாய் என கேட்டத்தற்கு வாட்சப்பில் இந்த வீடியோவை வெளியிட என கூறுகிறார்.
இந்த விடியோவின் அடிப்படையில் பார்க்கும் போது, அந்த கும்பலும், பெண்ணும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்று தெரிகிறது. மேலும், இந்த வீடியோவில் இந்த விஷயம் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று ஜோடியை மிரட்டுகிறது கும்பல்.
இதனால், இது குறித்து எந்த புகாரும் எழவில்லை. இந்நிலையில், வாட்ஸாப்பில் பரவிய இந்த வீடியோ, சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் கையில் சிக்கியுள்ளது. இதனடிப்படையில் இளைஞரைத் தாக்கிய கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்று காவலர்களிடம் புகாரளித்துள்ளார் பெண்ணின் உறவினர்.
இதனடுத்து, போலீசாரிடம் இளம் பெண் கூறியதாவது, ”அவர்கள் நாங்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறி இருவரையும் அடித்து உதைத்தார்கள். நான் அவர்களிடம் எங்களை விட்டு விடும்படி மன்றாடினேன். ஆனால், அவ்ர்கள் எங்கள் பெயர்களை கூறும் படி கேட்டு தொடர்ந்து எங்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள்”.
இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த கும்பலின் தலைவன், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ஒருதலையாகக் காதலித்தவன் என்பதும், இளம்பெண் அந்தக் காதலை ஏற்காமல் வேறொருவரைக் காதலித்ததால் அவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியில் சென்றிருந்த வேளையில், இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை 4 பேரைக் கைது செய்துள்ளது. இதில், பெண்ணைக் காதலித்தவனும், தாக்குதலுக்கு மூலகர்தாவுமானவன் தலைமறைவாகி விட்டான். அவனைக் காவல் துறை தீவிரமாகத் தேடி வருகிறது.
அந்தக் கொடூர தாக்குதலின் வாட்ஸாப் வீடியோ கீழே

No comments:
Post a Comment