கடந்த வருடம் அதிகமான படங்களை ரிலீஸ் செய்து சாதனை படைத்த தமிழ் சினிமா இந்த வருடம் அதைவிட டபுள் மடங்குக்கும் அதிகமான படங்களை ரிலீஸ் செய்து சாதனை படைத்துவிடும் போல. கடந்த வருடம் வாரத்துக்கு ஐந்தாறு படங்கள் தான் வெளிவந்தது.
ஆனால் இந்தாண்டில் வாரத்துக்கு ஏழெட்டு படங்கள் வெளிவரும் நிலையில் உள்ளது. அதுவும் இந்தவாரம் (06.03.15) மட்டும் 13 படங்கள் வெளிவர இருக்கிறதாம். தற்போது உலககோப்பை போட்டி நடைப்பெற்று வருவதாலும், பள்ளி தேர்வுகள் தொடங்கிவிட்டதாலும் படங்களை ரிலீஸ் செய்வதில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கொஞ்சம் தயங்குவார்கள்.
ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. வாரம் வாரம் பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டர்களை ஆக்கிரம்மிப்பதால் தியேட்டர்கள் கிடைத்தால் போதும் என்றுசிறிய பட்ஜெட் படங்கள் களம் இறங்க ஆரம்பித்துவிட்டன. அதன் காரணமாக தான் இந்த வாரம் மட்டும் 13 படங்கள் வெளிவர இருக்கிறதாம்.
சரி அது என்னென்ன படங்கள் என்று பார்ப்போம். சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன், ஆர்கே நடித்த என் வழி தனி வழி, சேரன் இயக்கியுள்ள ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, மகா மகா, கனல், ரொம்ப நல்லவண்டா நீ, இரவும் பகலும், தொப்பி, சேர்ந்து போலாமா, இஞ்சி மொரப்பா, ஆயா வடை சுட்ட கதை ஆகிய படங்களாகும்.
இதுதவிர சுதீப் நடித்த கன்னடப் படம் முரட்டு கைதி என்ற பெயரில் டப்பாகி வெளிவருகிறது. வில் கார்ட் என்ற ஹாலிவுட் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. தமிழ் நாட்டில் மொத்தம் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன. இதில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 700.
இதில் எனக்குள் ஒருவன் 250 முதல் 300 தியேட்டர்களில் ரிலீசாகிறது. மீதமுள்ள தியேட்டர்களைத்தான் 12 படங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு படமும் சராசரியாக 50 முதல் 100 தியேட்டர்களுக்குள்தான் வெளிவருகிறது.
வருகிற 8ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது. அதில் படங்கள் வெளியீட்டில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய படங்கள் வெளிவரவேண்டும். மற்ற வாரங்களில் சிறுபட்ஜெட் படங்கள் வெளிவரவேண்டும் என்கிற கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் என தெரிகிறது.

No comments:
Post a Comment