நார்வேயில் கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச தமிழ் திரைப்படவிழா நடத்தப்பட்டு வருகிறது. இப்போது 6வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
இதில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகைகள் ஆகியோரை தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டுக்கான விருது விழா வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கிறது. இதில் 12 தமிழ் படங்கள் திரையிட தேர்வாகியிருக்கிறது.
அது என்னென்ன படங்கள் என்று பார்ப்போம்.. சிகரம் தொடு, ஜிகிர்தண்டா, கயல், குக்கூ, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ராமானுஜன், நான்தான் பாலா, தேன்கூடு, காவியத் தலைவன், தெகிடி, காடு, குற்றம் கடிதல் இதைத் தவிர சர்வதேச அளவில் 9சி ஓஸ்லோ (நார்வே), உயிர்வரை இனித்தது (டென்மார்க்), சிவசேனை (லண்டன்) ஆகிய படங்களும் தேர்வாகி உள்ளது.
15 குறும்படங்களும், 4 டாக்குமெண்டரிகளும், 5 இசை ஆல்பங்களும், 2 அனிமேஷன் படங்களும் திரையிட தேர்வாகி உள்ளது. இதனை நார்வே தமிழ் திரைப்பட விழா தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது. இதில் வெற்றிபெறவிருக்கும் படம் மற்றும் மற்ற விருதுகளை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment