Tuesday, 31 March 2015

8 சிரிய பிரஜைகளுக்கு தலையை துண்டித்து மரணதண்டனை…!


ஐ.எஸ். தீவிரவாதிகள், தம்மால் 8 சிரிய பிரஜைகளுக்கு தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ காட்சி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த 8 பேருக்கும் மத்திய சிரிய மாகாணமான ஹமாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி வீடியோ காட்சியில் செம்மஞ்சள் நிற ஆடையணிந்திருந்த அந்த 8 பேரும் கண்கள் கட்டப்பட்டு கைகளும் முதுகுப் பக்கமாக கட்டப்பட்ட நிலையில் தீவிரவாத குழுவைச் சேர்ந்த இளவயது உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டு முகமூடியணிந்த தீவிரவாதிகள் முன்பாக மண்டியிட்டு அமர பணிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து அந்த வீடியோ காட்சியில் புன்னகையுடன் காணப்படும் சிறுவன் ஒருவன் தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் கத்திகளை கையளிக்கிறான். இந்நிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள அந்த எட்டுப் பேரும் தூய நாஸ்திகர்கள் என அந்த வீடியோ காட்சியில் தோன்றும் தீவிரவாதி ஒருவர் தெரிவிக்கிறார்.
ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் அந்த அமைப்பை மேலும் பலமடையச் செய்யவே வழிவகை செய்துள்ளதாக தெரிவித்த அந்த தீவிரவாதி, தமது வாள்கள் சிரிய ஜனாதிபதி பஷார் அல்– அஸாத், அவரது இனத்துவ குழுவினர் மற்றும் அவருக்கு சார்பாக போராடும் ஹிஸ்புல்லாஹ் போராளிகள் குழுவினரை விரைவில் நெருங்கவுள்ளதாக சூளுரைத்துள்ளார்.
மேற்படி தீவிரவாதிகளின் வீடியோ காட்சியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் கடந்த ஜனவரி மாதம் சிரிய எல்லைக்கு அண்மையிலுள்ள தனது சொந்த இடமான அர்ஸலில் வைத்து கடத்தப்பட்ட யுனெஸ் ஹுஜாரி என்பவர் உள்ளடங்குவதாக லெபனானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹுஜாரி கொல்லப்பட்டதை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

”அதிகார மமதையில் ஆடாதீங்க” ஆளுங்கட்சிக்கு கேப்டன் கண்டனம்!!


தமிழக சட்ட மன்றத்தில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேரை நுழையவிடாமல் தடை விதித்ததற்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க., எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை ஓராண்டு காலத்துக்கும், மற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ.க்களை 6 மாதத்திற்கும் சட்ட சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அ.தி.மு.க., அறிவித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க., சர்வாதிகார ஆட்சி செய்வதாகவும், தே.மு.தி.க.,வை தனிமைப் படுத்தி பகல் கனவு கான்கிறது அ.தி.மு.க., என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
"தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற நீதி மொழியை சிறிதும் பொருட்படுத்தாமல், தான்தோன்றித்தனமாக, எடுத்தேன்-கவிழ்த்தேன் என்கின்ற பாணியில், ஆளும் கட்சி என்கின்ற அதிகார மமதையில், தமிழக சட்டமன்றத்திலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்த பின்பும் "செவிடன் காதில் ஊதிய சங்காக" ஜெயலலிதாவின் வழிகாட்டுதல் படி ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பிற அமைச்சர்களும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், தேமுதிக சட்டமன்ற உறுபினர்களை பழிவாங்க வேண்டும், அதன் மூலம் தேமுதிகவை தனிமைப்படுத்திவிடலாம் என பகல் கனவு காண்கின்றனர்.
அதனுடைய வெளிப்பாடே சட்டமன்றப்பேரவை தலைவரும், சட்டமன்றப்பேரவை செயலாளரும், ஜெயலலிதாவை தகுதி நீக்கம் செய்தது குறித்து வெளியிட்ட அறிவிக்கையில், அவர்கள் தெரிவித்த கருத்துக்களை சட்டமன்றத்தில் எடுத்துக் கூறியதற்காக இன்று (31.03.2015) மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையை நிகழ்தியுள்ளனர்.
ஜனநாயகப் படுகொலை தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஆர்.மோகன்ராஜ், எல்.வெங்கடேசன், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர், கே.தினகரன் ஆகிய ஆறுபேரையும் நடப்பு கூட்டத்தொடர், அடுத்த கூட்டத்தொடர் மற்றும் அக்கூட்டத்தொடர் முடிந்த பின் பத்து நாட்கள் வரையிலும், அதாவது சுமார் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதியுள்ள தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நடைபெறவுள்ள கூட்டத்தொடர் முழுவதும், அதாவது சுமார் ஆறுமாத காலம் கலந்துகொள்ள கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வாதிகார ஆட்சியின் ஜனநாயகப் படுகொலையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். சம்பளம் கட் ஆகுமே தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் தொகுதியில் மக்கள் பணி நடைபெறாது, பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க முடியாது.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், விடுதியில் அவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு என அனைத்தும் மூடப்படும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும். மக்களுக்கு துரோகம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை சுமார் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்துள்ளது, அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு அதிமுக செய்கின்ற துரோகமாகவே இருக்கும்.
ஆணவத்தின் வெளிப்பாடு தமிழக வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, நடைமுறையிலேயே இல்லாத, புதிய நடைமுறையாக ஒரு ஆண்டு இடைநீக்கம் என தண்டனை வழங்குவது தேமுதிகவிற்கு மட்டுமேயாகும். சட்டமன்றத்தில் எதிர்கட்சியே இருக்கக்கூடாது, கேள்வி கேட்பதற்கு ஆளே இருக்ககூடாது, ஜெயலலிதாவின் புகழ்பாடும் மன்றமாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஆணவத்தின் வெளிப்பாடு தான் மிகக்கடுமையான தண்டனை வழங்கியதற்கு காரணமாகும்.
ஜாமீனை ரத்து செய்க மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து, வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்து, நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி தான், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதன் மூலம் அவரும், அவரது சகஅமைச்சர்களும் ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியுள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனையையும் ஜெயலலிதா மீறியுள்ளார். அதற்காக அவரது ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும். ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியதற்காக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்.
எங்குமே இந்த நிலையில்லை அதிமுக எம்பி மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை கிழித்தெறிந்தும், மைக்கை உடைத்தும் வன்முறையில் ஈடுபட்டார். புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் மற்றும் சபாநாயகரை முற்றுகையிட்டு, சட்டமன்றத்திற்குள் அவர்கள் நுழையமுடியாத அளவில் வன்முறையில் ஈடுபட்டனர்.
கேரளா சட்டமன்றத்தில் மேசைகள், நாற்காலிகள், மைக்குகள் உடைக்கப்பட்டன, பலருக்கும் ரத்தகாயங்கள் ஏற்பட்டது. அதேபோல் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திலும் பிரச்சனைகள் ஏற்பட்டது. அதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஐந்து முதல் பத்து நாட்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.
ஆனால் அதுபோன்ற சூழ்நிலை எதுவும் தமிழக சட்டமன்றத்தில் ஏற்படவில்லை. சர்வாதிகார ஆட்சி சட்டமன்றத்திலும், அவை உரிமை குழுவிலும் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ஆளும் அதிமுகவினர், சர்வாதிகார ஆட்சியை போல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிகக்கடுமையான தண்டனையாக சுமார் ஒரு ஆண்டுகாலம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுபேரும் இடைநீக்கம் என்பதை, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள, சட்டமன்ற மாண்புகளை காக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழக சட்டமன்றத்தில் தேமுதிகவிற்காக குரல் எழுப்பி, வெளிநடப்பு செய்த அனைத்து எதிர்கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்"

தினம் பலன் (01-04-2015)


தெரிந்து கொள்வோம்: இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்?
எல்லையில்லா இறையை ஒவ்வொருவரும் அவரவர் புரிதலுக்கேற்ப புரிந்து கொள்வதே இந்து மதத்தில் எண்ணற்ற தெய்வங்கள் உருவாகக் காரணம். இந்த புரிதல்கள் ஆளுக்காள் மாறுபடுகின்றன.
புரிந்து கொள்ளும் விதம் வேறானாலும், எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை.
இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. அது போக, எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்கள்:
மேஷம் - நலம்
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - செலவு
கடகம் - தெளிவு
சிம்மம் - லாபம்
கன்னி - பரிசு
துலாம் - பரிவு
விருச்சிகம் - உழைப்பு
தனுசு - கவனம்
மகரம் - சலனம்
கும்பம் - நன்மை
மீனம் - பக்தி

பூனை துரத்திச் சென்ற நாய்க்குட்டிக்கு நடந்த சோகம்….!


கார் இயந்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டி ஒன்றை பெரும் போராட்டத்தின் மத்தியில் தீயணைப்புப் படைவீரர்கள் மீட்ட சம்பவம் பிரித்தானியாவிலுள்ள பிளைமவுத் எனும் இடத்தில் இடம் பெற்றுள்ளது.
மைக் திரேசி என்பவருக்கு சொந்தமான மேற்படி வூடி என்ற நாய்க்குட்டி சம்பவதினம் பூனை ஒன்றை துரத்திச் சென்ற போது, திறந்திருந்த காரின் இயந்திரப் பகுதிக்குள் விழுந்து சிக்கிக் கொண்டுள்ளது.
இந்நிலையில் அந்த நாய்க்குட்டியை மீட்க மைக் திரேசியும் அயலவர்களும் மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியதையடுத்து, அவசரசேவைப் பிரிவினருக்கு உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படைவீரர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் வூடியை பாதுகாப்பாக மீட்டனர்.

உலக சாதனை படைத்த வீரரின் விசித்திர காதல்…!


உலக சாதனை படைத்த 4 அடி, 4 அங்குல உயரத்தைக் கொண்ட குள்ளமான உடல் கட்டுறுதி வீரரான அன்டன் கிராப்ட், 6 அடி, 3 அங்குல உயரத்தைக் கொண்ட பால் மாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் காதலை வென்றுள்ளார்.
தனது உடல் நிறையை விடவும் நான்கு மடங்கு அதிகமான நிறையைத் தூக்கிய உலகின் ஒரே மனிதராக அமெரிக்க புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த அன்டன் கிராப்ட் (52 வயது) விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை விடவும் ஒரு அடி அதிக உயரத்தைக் கொண்ட சினா பெல்லை (43 வயது) கடந்த 6 மாத காலமாக காதலித்து வருகிறார்.
கடந்த 10 வருட காலத்தில் பளு தூக்கும் தனது சாதனை முயற்சிகளின் போது தான் 5 தடவைகள் இறப்பு வரை சென்று உயிர் திரும்பியதாக அன்டன் கிராப்ட் தெரிவித்துள்ளார். ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய சினா பெல், அன்டன் கிராப்ட் முதன்முதலாக தன்னிடம் காதலைத் தெரிவித்த போது தனக்கு என்ன கூறுவதென்றே புரியவில்லை என்று கூறினார்.
எனினும் பாரம் தூக்குவதில் அவருக்கு இருந்த அதீத திறமைகளால் பின்னர் தான் அவர் பால் கவரப்பட்டதாக அவர் தெரிவித்தார். பளு தூக்குவதால் அன்டன் மிகவும் பாலியல் கவர்ச்சியுடையவராக இருப்பதாக தான் கருதுவதாக சினா பெல் குறிப்பிட்டுள்ளார். சினா பெல்லின் காதல் தனக்குக் கிடைத்துள்ளதையிட்டு தன்னை அதிர்ஷ்டசாலியொருவராக உணர்வதாக அன்டன் கிராப்ட் கூறுகிறார்.
அதேசமயம் அன்டன் கிராப்ட் தனது பளுத் தூக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வாராயின் அவர் மாரடைப்புக்கு உள்ளாகி மரணமடைய நேரிடலாம் என மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் யாருடைய ரசிகர் தெரியுமா..?


ஹாங்காங் நடிகர், ஆக்‌ஷன் இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், பாடகர் மற்றும் சண்டைக் கலைஞர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்து பல்வேறு சாதனைகளைப் படைத்திருப்பவர் நடிகர் ஜாக்கிசான்.
காமெடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பெரும்பாலும் ரசிகர்களால் ரசிக்கப்படுபவர். அகில உலக சூப்பர் ஸ்டாராக இருக்கும் இவருக்கு பிடித்த இந்திய நடிகர் யார் தெரியுமா.? பாலிவுட் நடிகர் அமீர்கான் தான்.
சமீபத்தில் வெளியான ஜாக்கிசான் நடித்த 'ட்ராகன் பிளேடு' படம் குறித்த பேட்டி ஒன்றின்போது, அவரிடம் பாலிவுட் படங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. தான் பாலிவுட் படங்களை தொடர்ந்து பார்ப்பதில்லை என்றாலும் பார்த்தவரையில் தன்னைக் கவர்ந்தவர் என்று அமீர்கானையே குறிப்பிட்டுள்ளார் ஜாக்கிசான்.
அதற்கு முக்கிய காரணமாக அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படத்தை தான் விரும்பி பார்த்து ரசித்ததாகவும் சொல்லியிருக்கிறார். அந்தப் படம் ஹாங்காங்கில் மிகப்பெரிய ஹிட் என்றும், அதிலிருந்து, தான் அமீர்கானின் ரசிகன் ஆகிவிட்டேன் என்றும் கூறியுள்ளார் ஜாக்கிசான்.

அவர்களுக்கு ’அது’ ரொம்ப சிறியது.. அதான் எந்த பெண்ணும் வரல.. நடிகரின் டுவிட்


பாலிவுட் நடிகர் கமால் ஆர். கானுக்கு டுவிட்டரில் யாரையாவது நக்கல் அடிக்கவில்லை என்றால் தூக்கமே வராது போல.. இவரிடம் அசின், சோனாக்ஷி சின்ஹா போன்ற நடிகைகளும் மாட்டினார்கள். ஆனால் அவர்களின் அதிரடி பதிலால் துவண்டு போய் இருந்தவர் தற்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்.
சமீபத்தில் ’அனுஷ்கா சர்மா சிட்னி போனதால்தான் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்றும், அதனால் அனுஷ்கா வீட்டின் மீது ரசிகர்கள் கல்லெறிய வேண்டும் என்றும் டுவிட்டரில் கூறி அனுஷ்கா சர்மாவை வம்புக்கு இழுத்தார்.
அதோடு "சிட்னி கிரவுண்டில் நன்றாக விளையாடுவார் விராட் கோலி என மக்கள் நம்பினர். ஆனால் இரவெல்லாம் விளையாடிய அவர் பகலில் ஏன் விளையாடப் போகிறார்?" என்று விராட் கோலியை மிக மட்டமாக கிண்டலடித்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர்கள் ஷாகித் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரையும் வம்புக்கு இழுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, பாலிவுட்டில் ஷாகித் மற்றும் ரன்வீருக்கு தான் அது சிறியது என்று நினைக்கிறேன். அவர்களால் 10 நிமிடங்களுக்கு மேல் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியவில்லை.
அதனால் தான் அவர்களுடன் எந்த பெண்ணும் நீண்ட நாட்கள் இருக்க மாட்டேன் என்கிறார்கள். ரன்வீர் சிங்குடன் இருந்துமா தீபிகாவுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. அப்படி என்றால் ரன்வீர் சிங் எந்த மாதிரியான ஆண் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது.
தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத ஆண்கள் அரைகுறை ஆண்கள் என்று நான் நினைக்கிறேன். போ கோவிந்தா போ என்று கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.