Saturday, 20 June 2015

குருவைத் தொடர்ந்து சிஷ்யன் எடுக்கும் பிரம்மாண்ட அவதாரம்..!!

விஜய் என்னதான் பெரிய ஹீரோவாக இருந்தாலும், அதிக ரசிகர்களை கொண்டிருந்தாலும், அவர் மீது தொடர்ந்து வைக்கப்படும் ஒரே குற்றச்சாட்டு என்றால், ஒரே போல நடிக்கிறார் என்பது தான்.
ஆனால், நீண்ட நாளாக இருந்து வந்த தனது இமேஜை சமீப படங்களில் மாற்றியுள்ளார் என்றே கூறவேண்டும். வித்தியாசமான கதைகள், தோற்றத்தில் மாற்றம் என்று இறங்கிவிட்டார்.
தற்போது அவர் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துள்ள ‘புலி’ படத்தில் சரித்திர வேடத்தில் நடிக்கிறார். அதேபோல, அடுத்து நடிக்க உள்ள அட்லீ படத்திலும், வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க உள்ளாராம். மேலும், அட்லீ பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கரின் சிஷ்யன் என்பதால், இப்படத்தை பிரம்மாண்டமாக இயக்க முடிவு செய்துள்ளாராம்.
விஜய் படம், தயாரிப்பாளர் தாணு என்பதால், அவர் தாராளமாக பட்ஜெட்டை விட்டுவிட்டாராம். இதனால், தன் குருவின் சிஷ்யன் நான் தான் என்பதை நிரூபிக்க தயாராகி வருகிறார் அட்லீ. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இன்றைய தினம்..!!(ஜூன் 21)

ஜூன் 21
உலக இசை தினம்..!!
“இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது, அமைதியாகவும் இருந்திட முடியாது’ என இசை குறித்து மறைந்த பிரெஞ்ச் கவிஞர் விக்டர் ஹியூகோ குறிப்பிட்டார். இசை இல்லாமல் வாழ்ந்திட முடியுமா நிச்சயமாக முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசையில், வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
எப்படி தோன்றியது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது, மனிதன் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. பறவைகளின் சத்தம் ஒருவிதமாகவும், விலங்குகளின் சத்தம் ஒரு விதமாகவும் இருக்கும். கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் பயணிக்கிறது.
இசைகள் பலவிதம்: பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை, நவீன இசை என பல பரிமாணம் உருவானது. ஒவ்வொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, தென்னிந்தியாவின் கர்நாடகா இசை பின்பற்றப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது.
1898 – குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது.
1999 – ஆப்பிள் நிறுவனம் தனது முதல் iBook-கை வெளியிட்டது.
2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
சிறப்பு தினம்:
உலக யோகா தினம்.
கிரீன்லாந்து தேசிய தினம்.

நடிகர் சங்க பிரச்னை: மெளனம் காக்கும் முன்னணி நடிகர்கள்..?

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல், அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, நடிகர்களுக்குள் பனிப்போர் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சரத்குமார் அணி, விஷால் அணி என இரு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் கடும் வாக்கு வாதம் செய்து வருகின்றனர். நடிகர் சங்கத்தில் பெரும் முறைகேடு நடப்பதாக நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
அதோடு ஜூலை 15ஆம் தேதி நடைப்பெறும்  நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் விஷால் அணினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க மறுத்தது.
இந்நிலையியில், “நடிகர் சங்க விவகாரங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் திருமண மண்டபம் கட்ட சொன்னார்கள். அதைவிட வருமானம் தரக் கூடிய வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் போட்டோம்.
அப்போதெல்லாம் குற்றம் சொல்லாதவர்கள், எங்களை சந்தித்து எந்த கருத்தும் சொல்லாதவர்கள், தற்போது தேவையில்லாமல் அவதூறு செய்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னால் அரசியல் சதி இருக்கிறது” என சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இப்படி நடிசர் சங்க கட்டப் பிரச்னை நாளுக்கு நாள் விஸ்பரூபம் எடுத்து வரும் நிலையில், முன்னணி நடிகர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் ஆகியோர் இதுவரை
வாய் திறந்து ஒரு கருத்து கூட தெரிவிக்கவில்லை.
ஆனால் நடிகர்கள் சிவகுமார், பொன்வண்ணன், கருணாஸ், ஆனந்தராஜ் ஆகியோர் விஷாலுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, தனது சகோதரர் கார்த்தி பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இனவெறி காரணமாக தேவாலையத்தில் துப்பாக்கி சூடு!!? வாலிபர் கைது!!

அமெரிக்காவில் இனவெறி காரணமாக 9 பேரை சுட்டுக்கொன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.


அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் இருக்கும் சார்ல்ஸ்டன் நகரில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆப்பிரிக்க – அமெரிக்கத் தேவாலயத்தில் வெள்ளை இன வாலிபர் ஒருவர் 9 கறுப்பினத்தவரை சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்தப் படுகொலைச் சம்பவம் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலையில் நிகழ்ந்தது. அப்போது மணி இரவு 9 இருக்கும். தேவாலயத்தில் எட்டு பேர் இறந்து கிடந்ததாக தலைமை போலீஸ் அதிகாரி முல்லன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றபோது ஒன்பதாவது நபர் மரணமடைந்தார்.
மேலும் ஒருவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருவதாக அவர் கூறினார். இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான நபரை கைது செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், கறுப்பினத்தவர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக இப்படி செய்ததாக அவ்வாலிபர் தெரிவித்துள்ளார்.
இந்தச் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அந்த தேவாலத்துக்கு அருகே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் திரண்ட மக்களிடம் கலைந்துசெல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரி விக்கப்பட்டது.

இயக்குநரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு வினோத பரிசு: பாலிவுட்டில் பரபரப்பு

தன் சமூகத்தில் நடக்கும் கௌரவக் கொலைகள் உட்பட பல சமூக விரோத செயல்களை தோலுரிக்கும் விதமாக தன் படைப்புகள் மூலமாக வெளிப்படுத்தி வருபவர் பாலிவுட் இயக்குநர் வினோத் கப்ரி. சமூகத்தை மாற்ற நினைக்கும் இளம் தலைமுறை சினிமா இயக்குநர்களில்  இவரும் ஒருவர்.
இவர் தற்போது உண்மை சம்பவத்தை அடைப்படையாக வைத்து “Miss Tanakpur Haazir Ho” என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.  வருகிற ஜூன் 26-ம் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அந்த டிரைலரில் மாட்டை பலாத்காரம் செய்துவிட்டதாக இளைஞன் ஒருவன் தண்டிக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் தங்கள் ”காப் பஞ்சாயத்து” அமைப்பை இழிவு படுத்துவதாக கூறி அதன் தலைவர் ராஜூ அகலாவத் இயக்குனரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 51 எருமைகள் பரிசாக வழங்கப்படும் என்ற வினோத அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கணக்கு வழக்கில்லாமல் கவுரவக் கொலைகள் செய்வது, 50 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மீது ஊர்வலமாக கொண்டு செல்வது, முசாபர் நகர் கலவரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது, என்று அரசின் எந்த அதிகாரத்திற்கும் கட்டுப்படாமல், வட இந்திய கிராமங்களில் தனித்து அதிகாரம் செலுத்தும் ஒரு அமைப்பு தான் இந்தக் ’காப் பஞ்சாயத்து’.
அவர்கள் செய்யும் குற்றங்களை வைத்துதான் வினோத் கப்ரி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.  அதனால் தான் அந்த அமைப்பு அவர் மீது கொலை வெறியில் சுற்றுகிறது அந்த அமைப்பு.
இந்த படத்தின் டிரைலரை  நீங்களே பாருங்க..

இணையத்தளத்தில் வெளியான ’புலி’..

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன்,  ஸ்ரீதேவி, சுதீப் உட்பட பல பிரபலங்களின்  நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ’புலி’.
விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது கிராபிக்ஸ் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே, படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து பல்வேறான செய்திகள் பரவி வந்தது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழு ’புலி’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் 20ஆம் தேதி இரவு 12 மணிக்கும், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீஸர் 21ம் தேதி இரவு 12 மணிக்கும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், ’புலி’ கெட்டப்பில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த புகைப்படங்களுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் ரசிகர்கள் பலரும் அப்படங்களை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பதிவு செய்து வருகிறார்கள்.
இணையத்தளத்தில் வெளியான ’புலி’-1
இணையத்தளத்தில் வெளியான ’புலி’
இணையத்தளத்தில் வெளியான ’புலி’-1
இணையத்தளத்தில் வெளியான ’புலி’ (2)
விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை கணக்கில் கொண்டு ’புலி’ படத்தை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.

கர்நாடக அரசிடம் வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம் காக்கா முட்டை!!

சமீபத்தில்  வெளியான ‘காக்கா முட்டை’ படத்துக்கு கர்நாடக அரசு முழுமையான வரிச்சலுகை அளித்துள்ளது. கர்நாடகாவில் வேற்று மொழிப் படம் ஒன்றுக்கு முதல்முறையாக இந்தச் சலுகை கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.   உலக சினிமாவிற்கு நிகராக ஒரு தமிழ் சினிமா என்று கூட சில பிரபலங்கள் புகழ்ந்து வருகின்றனர். வசூலிலும் இப்படம் பட்டைய கிளப்பிவருகின்றது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பல விருதுகளை குவித்த  இப்படம் விரைவில்  கன்னடத்திலும் வெளியாகவுள்ளது.
காக்கா முட்டை படத்தை தமிழ் ரசிகர்கள் மட்டு மில்லாமல் பிறமொழி ரசிகர்களும் விரும்பி பார்க்கின்றனர். இருவாரங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் வெளியான இந்தப் படம், கன்னட இலக்கியவாதிகளால் வெகுவாக பாராட்ட‌ப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘ விளிம்பு நிலை மக்களின் வாழ்வையும் ஏழை சிறுவர்களின் வலியையும் சிறப்பாக விளக்கிய ‘காக்கா முட்டை’ திரைப்படத்துக்கு வரிவிலக்கு வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இப்படத்தை விநியோகம் செய்த ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவின் தலைமை செயல் அதிகாரி விஜய் சிங் கூறிய போது, ”எங்களுடைய திரைப்படத் துக்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. எதிர்பாராமல் வந்த இந்த அறிவிப்பால், ‘காக்கா முட்டை’படத்தை கன்னட மக்களும் கண்டு ரசிப்பார்கள்.
கன்னட மொழி அல்லாத வேற்று மொழி படத்துக்கு கர்நாடகத்தில் வரிவிலக்கு அளிப்பது இதுவே முதல்முறை. அதிலும் தமிழ்மொழி படத்துக்கு வரிவிலக்கு அளித்த தில்லை என நினைக்கிறேன். இந்த சிறப்பான ஆணையை பிறப்பித்த கர்நாடக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.