சவுதி அரேபிய மசூதியில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நேற்று சவுதி அரேபியாவில், அல் கதீ என்ற பகுதியில் ஷியா பிரிவினரின் மசூதியில் 150க்கும் அதிகமானோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் தன்னுடன் கொண்டுவந்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டினை வெடிக்க வைத்தார்.
இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளிக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தற்கொலை தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

No comments:
Post a Comment