கத்திரி வெயில் உச்சத்தை எட்டியதை அடுத்து சென்னையில் அனல்காற்று வீசி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கி கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது.
வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையிலும் பகல் 12 மணிக்கே வெயில் 100 டிகிரியை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் வெயிலால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் திணறி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களில் 200 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:
Post a Comment