தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்றுள்ளார். அவருடன் 28 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்றுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைக்கு உள்ளாகி தற்போது வழக்கில் இருந்து விடுதலை அடைந்துள்ள அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக மீண்டும் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம் நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த பதவியேற்பு விழா காலை 11 மணிக்கு ஆரம்பித்து 11.30 வரை நடைபெற்றது.
விழாவில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக 5 வது முறை பதவியேற்றார். அதோடு, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல், வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை ஆகிய துறைகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுடன், ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம். நத்தம் விஸ்வநாதன் உட்பட 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு தமிழக ஆளுநர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசியம் காக்கும் உறுதிமொழியும் செய்து வைத்தார்.
இவ்விழாவில், பாஜக சார்பில், மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும், நடிகர்கள், ரஜினிகாந்த், சரத்குமார், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரும், மதுரை ஆதினம் அவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment