ஆஸ்திரேலியா அருகில் அமைந்துள்ள பப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 மேக்னிட்டியூட் என்ற அளவில் பதிவாகியுள்ள இந்த நில நடுக்கத்தால், அரபிக்கடலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த வியாழக்கிழமை அன்று, பப்புவா நியூ கினியா அருகில் அமைந்துள்ள நியூ பிரிட்டன் என்ற தீவு நாட்டில், 6.9 மேக்னிட்டியூட் அளவுள்ள நில நடுக்கம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்து இன்று காலை 8:06 மணியளவில், கொகொபோ என்ற பகுதியில், 7.1 மேக்னிட்டியூட் அளவிலான நில நடுக்கம் பதிவானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவில் தாக்கம் ஏதும் இல்லை என்பதால், இந்த எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டுவிட்டது.
No comments:
Post a Comment